- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டர் ஏன் பண்ணினேன்னு தோணுச்சு - நொந்துபோன பிரபல நடிகர் இப்படி சொல்றதுக்கு இதுதான்...

அந்த கேரக்டர் ஏன் பண்ணினேன்னு தோணுச்சு – நொந்துபோன பிரபல நடிகர் இப்படி சொல்றதுக்கு இதுதான் காரணமா

- Advertisement -

தமிழ் சினிமாவில், சில நடிகர்களுக்கு ஒரே மாதிரியான கேரக்டர்கள் தொடர்ந்து வருவது வழக்கம். பஞ்சாயத்து தலைவர் என்றால், அதற்கு வினுசக்கரவர்த்தி மிக பொருத்தமாக இருப்பார். ரிக்‌ஷாக்காரன் போன்ற கேரக்டருக்கு, சார்லி மிக சரியாக பொருந்துவார். அதுபோல், குடிபோதை ஆசாமியாக நடிக்க மயில்சாமி சிறந்த தேர்வாக இருப்பார். இப்படி சில நடிகர்களுக்கு குறிப்பிட்ட கேரக்டர் மிகச் சரியாக பொருந்தி விடுகிறது.

அந்த வகையில், குணச்சித்திர நடிப்பில் சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் நடிகர் தலைவாசல் விஜய் இருந்து வருகிறார். தேவர் மகன் படத்தில், கமலின் குடிபோதை சகோதரராக இவரது நடிப்பு பேசப்பட்டது. அதே போல், காதல் கோட்டை படத்தில், ஆட்டோ டிரைவராக வந்து, அஜீத்குமாருக்கு கவலைப்படாதே சகோதரா என ஆறுதல் சொல்லி பாட்டுப் பாடி காதலுக்கு உதவுவார்.

- Advertisement -

இப்போதும் தொடர்ந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்துவரும் தலைவாசல் விஜய், உன்னை நினைத்து படத்தில், கதாநாயகி லைலாவின் தந்தையாக நடித்திருப்பார். துவக்கத்தில், தனது குடும்பத்துக்கு உதவும் சூர்யாவுக்கு, தனது மகளை திருமணம் செய்து வைக்க நினைக்கும் அவர், ஒரு கட்டத்தில் சூர்யாவை விட வசதியான ராம்ஜி வந்தவுடன், சூர்யாவை புறக்கணிப்பார். இதுபோன்ற நெகடிவ் கேரக்டர்களால் சில நேரங்களில் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு நடிகர்கள் ஆளாக நேரிடும். அதில் தலைவாசல் விஜயும் ஒருவர்.

அதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் தலைவாசல் விஜய் கூறியதாவது, காதல் கோட்டை படம் பார்த்த ரசிகர்கள் என்னை சகோதரா என அழைத்தனர். காதல் கொண்டேன் படத்தில் தனுஷூக்கு அப்பாவாக நடித்த பிறகு, நைனா என என்னை அழைத்தனர். நாம் மிக சாதாரணமாக ஒரு கேரக்டராக நினைத்து அந்த படங்களில் அப்படி நடித்தாலும், அந்த கேரக்டரை ரசிகர்கள், அந்த நடிகரின் கதாபாத்திரமாகவே எடுத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

உன்னை நினைத்து படத்தில், ஒரு மோசமான தந்தையாக நடித்திருப்பேன். அடுத்து, சிம்மராசி படத்தில் ரேஸ் விளையாட, மனைவியை முதலாளிக்கு விட்டுக்கொடுக்க நினைக்கும் தவறான ஒரு கணவனாக நடித்திருப்பேன். அதுபோல், மகளிருக்காக படத்திலும், ஒரு கான்ஸ்டபிள் மீது ஆசைப்படும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பேன். கோகுலத்தில் சீதை படத்தில், பெண் புரோக்கர் பாத்திரத்தில் நடித்திருந்தேன்.ஒரு தியேட்டரில், கோகுலத்தில் சீதை படத்தில் நான் பேசிய ஒரு காட்சியை, படம் வெளியான ஒரு வாரத்தில் நீக்கி விட்டனர்.

அந்த படத்தில், எக்ஸ்போர்ட் கம்பெனியில் தினமும் காலையில் போல், ஈவ்னிங் வரை கஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு பதிலாக, ஒரு ரூமில் சிறிது நேரம் படுத்து இருந்தால் அந்த பணத்தை எளிதாக சம்பாதித்து விடலாம் என, பெண்களை பற்றி டயலாக் பேசி இருப்பேன். பெண்களை இழிவுபடுத்தும் காட்சியாக அது இருந்ததால், அந்த காட்சி நீக்கப்பட்டது. இதனால், அந்த கேரக்டர் ஏன் பண்ணினேன்னு தோணுச்சு. ஆனால், என்னை ரொம்ப பாதித்த கேரக்டர் அது. அதே சமயத்தில் மக்கள் மத்தியில் பேசப்பட்ட கேரக்டராகவும் இருந்தது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்