- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர் தோல்வி எதிரொலி... மூடுவிழா காண்கிறதா பிரபல தயாரிப்பு நிறுவனம்?... தமிழ் திரையுலகம் அதிர்ச்சி...

தொடர் தோல்வி எதிரொலி… மூடுவிழா காண்கிறதா பிரபல தயாரிப்பு நிறுவனம்?… தமிழ் திரையுலகம் அதிர்ச்சி…

- Advertisement -

விஜய் – ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான கத்தி திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது லைக்கா நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. சொல்லப்போனால் அது பிளாக்பஸ்டர் ஹிட் என்று கூறலாம். இதன்பிறகு படங்களை அடுத்து அடுத்து தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தது லைக்கா நிறுவனம்.

அதற்கு ஏற்றது அந்த நிறுவனத்திற்கு தரமான வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தன. நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து வெற்றியை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சமீப காலமாக அந்த நிறுவனத்திற்கு பெரிய வெற்றி திரைப்படங்கள் எதுவும் அமையவில்லை.

- Advertisement -

மாறாக அடுக்கடுக்கான தோல்விகளே வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ரஜினிகாந்த் வைத்து இரண்டு திரைப்படங்களை எடுக்க அந்த நிறுவனம் ஒப்பந்தமிட்டது. இதில் முதலாவதாக வெளிவந்தது லால் சலாம் திரைப்படம். உண்மையில் ரஜினி ரசிகர்களுக்கே அப்படி ஒரு படம் வந்ததா என்று கூட தெரியாது. அந்த வகையில் அந்த திரைப்படம் அமைந்திருந்தது.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அழுத்தம் இல்லாத திரைக்கதை காரணமாக, லால் சலாம் வெற்றி பெறவில்லை. பிறகு லைக்கா நிறுவனத்தின் சார்பில், வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். இதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.

- Advertisement -

இப்படி இருக்க லைக்கா நிறுவனத்திற்கு பெருத்த அடியை கொடுத்தது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த திரைப்படம் தயாரிப்பில் இருந்தது. இதனை எடுக்கும்போதே மூன்றாம் பாகத்திற்கான வேலைகளையும் சங்கர் முடித்தார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறியது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது.

இறுதியாக அவர்கள் எதிர்பார்த்து இருந்த அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படமும், அதிரிபுதிரியான வெற்றியை பெறவில்லை. இப்படியான சூழலில் அந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் மற்றும் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடனான படத்திற்கு பிறகு தயாரிப்பதை அந்த நிறுவனம் நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்