- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமன்ன படத்தின் ட்ரைலர்

மாமன்ன படத்தின் ட்ரைலர்

- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் படைப்புகளை கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்த படம் தான் மாமன்னன். இவரின் முந்தைய படைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளையும் கொடுமைகளையும் திரை வெளிச்சத்தில் மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்.

maamannan

அதேபோல் மக்களும் அவரது படைப்பிற்கு நல்லதொரு வரவேற்பை கொடுத்திருந்தனர். தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக கொண்டு இவர் இயக்கியுள்ள படம் மாமன்னன். உதயநிதியோடு சேர்ந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்ற பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்தப் படத்திற்கான பாடல்கள் அனைத்தும் வெளியாகி மக்களிடத்தில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு பாடிய ஒரு பாடல் அனைவரின் மனதையும் உறுக்கும் வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது மாமன்னன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

maamannan

இந்த படத்தின் டிரைலரை காண்கையில் இது தற்காலத்தில் உள்ள அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஒரு படமாக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது. அதே போல் இந்த படத்தில் இதுவரை நாம் பார்த்திராத வகையில் வடிவேலுவின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது இந்த ட்ரைலரின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

- Advertisement -

இது வடிவேலுவின் இன்னொரு பரிமாணத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. டிரைலரை பார்க்கையில் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக இருக்க கூடுமோ என்று தோன்றுகிறது. அதேபோல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை ட்ரைலரில் அருமையாக உள்ளது. படத்திற்கு நிச்சயம் அவரின் பின்னணி இசை பெரிய அளவில் வலு சேர்க்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது

- Advertisement -

சற்று முன்