- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவீரன் படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? வேற லெவலா இருக்கும் போலயே

மாவீரன் படம் இப்படிப்பட்ட கதையம்சம் கொண்டதா? வேற லெவலா இருக்கும் போலயே

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மாவீரன்”. இத்திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்ததில் இருந்தே இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. அந்த அறிவிப்பு வீடியோவில் “மாவீரன்” திரைப்படத்தின் கதை ஓரளவு கணிக்க முடிந்தது.

அதில் சிவகார்த்திகேயனை வானத்தில் இருந்து யாரோ பொம்மலாட்டம் போல் இயக்குகிறார்கள், அதற்கு சிவகார்த்திகேயன் கட்டுப்படுகிறார் என்ற விஷயம் மட்டும் தெரிய வந்தது. அதன் பின் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்தது. அந்த டிரைலரில் இத்திரைப்படத்தின் கதை குறித்து மிக துள்ளியமாகவே கணிக்க முடிந்தது. சிவகார்த்திகேயன் ஒரு சாதாரணமான இளைஞராக வாழ்ந்து வருகிறார். அவருக்கு மேலே இருந்து ஒரு குரல் கேட்கிறது. அந்த குரலுக்கு கட்டுபட்டே அவர் செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது.

டிரைலரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேலே பார்ப்பது போல் காட்டுகிறார்கள். அதனை கொண்டு பார்க்கும்போது மேலே இருந்து ஒரு குரலோ அல்லது ஒரு நபரோ அவரை கட்டுபடுத்துகிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது. இதனை வைத்து பார்க்கும்போது சிவகார்த்திகேயன் கெரியரில் மிகவும் வித்தியாசமான கதைக்களமாக “மாவீரன்” திரைப்படம் அமையவுள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

“மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், சரிதா, குக் வித் கோமாளி மோனிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்க, விது அய்யன்னா இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தி டாக்கீஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்