- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரைப்பட வசூல் நிலவரங்கள் எதிலும் உண்மையில்லை; அதிகமாகவோ பொய்யாகவோ தான் இருக்கின்றன - உண்மையை போட்டுடைத்த...

திரைப்பட வசூல் நிலவரங்கள் எதிலும் உண்மையில்லை; அதிகமாகவோ பொய்யாகவோ தான் இருக்கின்றன – உண்மையை போட்டுடைத்த விஜய் பட தயாரிப்பாளர்!

- Advertisement -

தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ. தமிழில் நடிகர் விஜய் நடித்த வாரிசு என்ற படத்தை தயாரித்தவர். தெலுங்கு சினிமாவில் முன்னணி விநியோகஸ்தராகவும் சினிமா தியேட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு முக்கிய நபராகவும் தில்ராஜூ இருந்து வருகிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், திரைப்படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியதாவது, ஒரு முன்னணி நட்சத்திர நடிகரின் திரைப்படத்தின் உண்மையான வசூல் விவரங்கள் அதன் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்.

- Advertisement -

இருப்பினும் ஒரு படத்தின் வசூல் புள்ளி விவரங்கள் மற்றொரு படத்திற்கான அளவுகோலாக பயன்படுத்தும் ஒரு சூழலில் இன்றைய சினிமா சிக்கி உள்ளது. இதன் விளைவாக நடிகர்கள் மற்றும் அவர்களின் ரசிகர்களின் மன நிறைவை அல்லது கௌரவத்தை திருப்திபடுத்த வேண்டிய சூழல் உள்ளது.

அதனால் மிகைப்படுத்தப்பட்ட வசூல் புள்ளி விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப் படுத்தவும் போட்டியிடும் ரசிகர் குழுக்களுக்கு இடையே தங்கள் நட்சத்திரமே உயர்ந்தவர் என்ற விஷயத்தை தக்க வைக்கவும் இத்தகைய வசூல் அறிவிப்புகள் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன.

- Advertisement -

திரைப்படங்களின் பட்ஜெட் உயர்வுக்கு அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளமும் ஒரு முக்கிய காரணமாக மாறி உள்ளது. பல பான் இந்தியா திரைப்படங்களில் ஒரு முன்னணி நட்சத்திரத்தின் சம்பளம் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை கூட இருக்கலாம்.

நட்சத்திரங்களின் சம்பளம் பெருமளவில் உயர்ந்திருப்பது, தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பு, டிக்கெட் விலைகள் உயர்வு ஆகியவை தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையவும் காரணமாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர் தில்ராஜூ வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்