- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்சிற்றம்பலம் இயக்குனருடன் மாதவன் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா... ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கும் ரசிகர்கள்...

திருச்சிற்றம்பலம் இயக்குனருடன் மாதவன் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா… ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கும் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமா கவனிக்க தவறிய இயக்குனர்களில் மித்ரன் ஜவஹரும் ஒருவர். இதைக் கூறியது மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் தான். அவர் ஒரு பேட்டியில் இதனை தெரிவித்திருப்பார். மித்ரன் ஜவகர் இயக்குனராக அறிமுகமானது யாரடி நீ மோகினி திரைப்படத்தில்தான்.

 

- Advertisement -

எடுத்ததெல்லாம் வெற்றி, தனி ரசிகர் கூட்டம் என உச்சத்தில் இருந்த செல்வராகவன், தெலுங்கில் வெங்கடேஷ் மற்றும் திரிஷாவை வைத்து எடுத்த திரைப்படம் ஆடாவரி மாட்டலேக்கு. இதன் தமிழ் ரீமேக்காக உருவான திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. சொல்லப்போனால் தெலுங்கில் விட அதனை தமிழில் மிக அழகாக இயக்கியிருந்தார் மித்ரன் ஆர் ஜவகர்.

 

- Advertisement -

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான அந்தத் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலை வாரி குவித்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடனே பயணித்தார் மித்ரன் ஜவகர். அவருடன் இணைந்து குட்டி மற்றும் உத்தமபுத்திரன் என இரண்டு திரைப்படங்களை இயக்கினார்.

 

இதில் உத்தமபுத்திரன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும் அந்த அளவு கல்லா கட்டவில்லை. இதன்பிறகு மதில் என்னும் சீரிசை எடுத்த அவர், மீண்டும் இயக்கத்தின் வாசலுக்குள் நுழைந்து கை வைத்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷிற்கு அடுத்ததாக மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம்.

 

மிகவும் சாதாரண ஒரு கதையை, தமிழ் சினிமா பார்த்து பழகிய ஒரு உரையாடலை மீண்டும் கையில் எடுக்கும் போது அதில் புதுமையை புகுத்தினால் மட்டும்தான் இங்கு வெற்றி கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். அப்படியான ஒரு கான்செப்ட்டை கையில் எடுத்து தான் அதில் ஸ்கோர் செய்தார் மித்ரன் ஜவகர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

 

இந்தத் திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் வாழ்ந்த நித்யா மேனன் தேசிய விருதை தட்டி சென்றார். இப்படியான சூழலில், மித்ரன் ஜவகர் அடுத்ததாக, மாதவனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அதிர்ஷ்டசாலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான டைட்டில் இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்