- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த லிஸ்ட்டில் சேருமா? அல்லது இந்த வரிசைக்கு போய் விடுமா? கூலி தோல்வியால் மதராஸி படத்துக்கு...

அந்த லிஸ்ட்டில் சேருமா? அல்லது இந்த வரிசைக்கு போய் விடுமா? கூலி தோல்வியால் மதராஸி படத்துக்கு சிக்கல் – சிவகார்த்திகேயன் அப்செட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் வெளியான தீனா கஜினி ரமணா ஏழாம் அறிவு கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. கஜினி படத்தை பாலிவுட் நடிகர் அமீர்கானை ஹீரோவாக வைத்து இந்தியிலும் ஏஆர் முருகதாஸ் ரீ மேக்ஸ் செய்து எடுத்தார்.

இந்தியிலும் கஜினி சக்கைப்போடு போட்டு பெரிய வெற்றியை பெற்றது. அதே நேரத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் இந்தியில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் ஆகிய படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக இருந்தன. தமிழில் கடைசியாக ஏஆர் முருகதாஸ் இயக்கிய படம் தர்பார், இந்தியில் சிக்கந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்தவரை இப்போது யாரெல்லா்ம ஜாம்பவான் இயக்குனர் என கொண்டாடப்படுகிறார்களோ, யார் எல்லாம் முன்னணி நட்சத்திர நடிகர் என்று சொல்கிறார்களோ அவர்களது படங்கள்தான் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. காட்டு மொக்கை என்று அந்த படங்களை ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைஃப் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா, தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பல படங்கள் பிளாப் தந்து விட்டன.

- Advertisement -

இந்த சூழலில் நேற்று முன்தினம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படமும் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கதையே எழுத தெரியாத ஒருவர் எழுதிய கதையாக தான் இது இருக்கும் என்ற கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த படத்தில் ரஜினியை தவிர யார் நடித்திருந்தாலும் ஒரு காட்சிக்கு மேல் ஓடாது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி துப்பாக்கி போன்ற வெற்றிப் படங்கள் வரிசையில் சேருமா, அல்லது தர்பார் சிக்கந்தர் போன்ற தோல்வி படங்கள் வரிசையில் சேருமா என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது. நாயகன் சிவகார்த்திகேயனும் இதே குழப்பத்தில் அப்செட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்