- Advertisement -
Homeபொழுதுபோக்குபெற்றோர் மற்றும் மனைவி நினைவாக கோவில் கட்டிய நடிகர் மதுரை முத்து - தமிழ் புத்தாண்டில்...

பெற்றோர் மற்றும் மனைவி நினைவாக கோவில் கட்டிய நடிகர் மதுரை முத்து – தமிழ் புத்தாண்டில் திறப்பு விழா நடத்தி பெருமிதம் !

- Advertisement -

வயிறு குலுங்க வைக்கும் சிரிப்புகளை அள்ளி வழங்கிப் பேசினாலும் இடையிடையே வாழ்க்கைக்கு தேவையான நல்ல சிந்தனை முத்துகளை அள்ளி வழங்குவதில் கெட்டிக்காரர் மதுரை முத்து. எப்போதுமே அவரது பேச்சில் காமெடியும் இருக்கும். அதே நேரத்தில் நல்ல சிந்தனைகளும் கலந்திருக்கும்.

சன் டிவியில் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஸ்டேண்ட் அப் காமெடி பேசுபவராக அறிமுகமானவர்தான் மதுரை முத்து. எப்போதுமே நிகழ்ச்சியில் முதல் பேச்சாளரும் அவர்தான். அப்போதே அவரிடம் இருந்து வெளிப்பட்ட திறமை இவரை எங்கேயோ கொண்டு சேர்க்கும் என்பது பலருக்கும் புரிந்தது.

அதை நிரூபிக்கும் விதமாக இன்று டிவி சேனல்களில் காமெடி ஷோவில் நடுவராக மதுரை முத்து இருக்கிறார். கோவில்கள், பள்ளி கல்லூரி விழாக்கள் பொது நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராக மதுரை முத்து பங்கேற்கிறார். நகைச்சுவை பட்டிமன்றங்களை நடத்தி வருகிறார். சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை முத்து. இவரது பெற்றோர் ராமசாமி, முத்து இருளாயி. இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த வாகன விபத்தில் மதுரை முத்துவின் மனைவி லேகாவும் மறைந்து விட்டார்.

இதையடுத்து தன்னுடைய தாய் தந்தை மற்றும் மனைவி ஆகியோருக்கு சிலைகள் அமைத்து கோவில் கட்டியுள்ளார் மதுரை முத்து. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று அந்த கோயில்களின் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கும் கிராம மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை மதுரை முத்து வழங்கினார். மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகர் மதுரை முத்து கூறியதாவது, பெற்றோரை அவமதிப்பது அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் இருப்பது, போதைக்கு அடிமை, பெற்றோரை அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த கோவில்களை அமைத்துள்ளேன். பெற்றோரை மதித்து வணங்குதல் எவ்வளவு சிறப்பு என்பதை உணர்த்த எனது பெற்றோருக்கு சிலை அமைத்துள்ளேன். அதேபோல் எனது மனைவிக்கும் கோவிலாக உருவாக்கி உள்ளேன் என்று கூறியிருக்கிறார்
.

சற்று முன்