- Advertisement -
Homeபொழுதுபோக்குவேற லெவலுக்கு போய்விட்ட நடிகர் விஜய் சேதுபதி, மலேசியாவில் கிடைத்த அமோக வரவேற்பு - மலாய்...

வேற லெவலுக்கு போய்விட்ட நடிகர் விஜய் சேதுபதி, மலேசியாவில் கிடைத்த அமோக வரவேற்பு – மலாய் மொழியில் மக்கள் செல்வனை கொண்டாடிய ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நடிகர்களில் மிக முக்கியமானவர், எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் போகிற போக்கில் நடித்து விட்டு போகிற அளவுக்கு மிகப்பெரிய கலைஞராக இருக்கிறார். ஹீரோ, வில்லன், காமெடியன் என்று எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் விஜய் சேதுபதி தன்னை நிரூபித்து விடுகிறார்.

ஆனால் விஜய் சேதுபதி செய்த மிகப்பெரிய தவறாக அவரது ரசிகர்களே சொல்வது என்னவென்றால் ஹீரோ அல்லது வில்லன் இரண்டில் ஒன்றை தேர்வு செய்து நடிக்காமல் இரண்டு விதமான கேரக்டர்களிலும் அவர் மாறி மாறி நடிக்கிறார், சில படங்களில் கெஸ்ட் ரோலில் வருகிறார். சில படங்களில் கேமியோ ரோலில் வருகிறார். அதனால் அவருக்கான முக்கியத்துவம் உள்ள படங்களை அடையாளம் காண முடியவில்லை என்கின்றனர்.

இதை தனது பரீட்சார்த்த முறையில் உணர்ந்துவிட்ட நடிகர் விஜய் சேதுபதி இனி நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன், இனிமேல் வில்லன், கேமியோ, கெஸ்ட் ரோல்களில் நடிக்கவே மாட்டேன் என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டார். இதையடுத்து இப்போது ஹீரோ கேரக்டர்களில் மட்டுமே நடிக்க படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் வெற்றிப் படங்களே இல்லை. விடுதலை படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் பெயர் சொல்லும்படியான படங்களே இல்லாத சூழல் ஏற்பட்டது. இந்தியில் அவர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்த ஜவான் படம் பெரிய வெற்றியடைந்த போதிலும் இந்தியில் பெரிய மார்க்கெட் கிடைக்கவில்லை. இந்தியில் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படமும் விஜய் சேதுபதிக்கு தோல்வியை தந்தது.

ஆனால் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, அவரை வேற லெவலில் வெற்றி நாயகனாக மாற்றிவிட்டது. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு சர்வதேச தரத்திலான ஒரு உலக படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் கடந்த மாதம் இந்த படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில், மலேசியாவில் மலாய் மொழியில் வெளியான மகாராஜா படத்தை அங்குள்ள மலாய் மக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். அந்த படம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறையாக மகாராஜா படத்தை பெருமைக்குரிய படமாக பார்த்து ரசிக்கின்றனர். அதனால் மலேசியா சென்றால் படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கு மகாராஜா வரவேற்பை தர மலாய் மக்கள் தயாராக இருக்கின்றனர்.

சற்று முன்