இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் தி கோட் படம் 275 கோடி ரூபாய் கடந்து வசூலில் சாதனை புரிந்திருக்கிறது.
இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அப்பா, மகனாக நடித்திருந்தார். இதில் மகன் கேரக்டரில் விஜய் நடிப்பு இதுவரை பார்க்காத வித்யாசமான, அசத்தலான நடிப்பாக இருந்தது என்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தில் பல ஸ்பெஷல் விஷயங்களை கொண்டு வந்து ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் வெங்கட் பிரபு.
குறிப்பாக இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஒரு காட்சியில் இடம்பெற்றார். அதே போல் படத்தின் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த 1980, 90களில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த நடிகர் மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் வசீகரா படத்துக்கு பிறகு தி கோட் படத்தில் நடிகை சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகர் பிரசாத் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் உடன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதையெல்லாம் விட மிக முக்கியமாக படத்தின் இறுதிக் காட்சியில் கிரிக்கெட் போட்டி மைதானத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
அதேபோல் நடிகர் விஜய் தனது மகளாக நடித்த பெண்ணிடம், நீ யாரோட போன் என்று கேட்டு அதை அவர் தல பேன் என்று சொல்லி அஜித்குமார் நடித்த மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் வந்தது படத்தில் வேற லெவலில் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்தது. இந்த ஒரு காட்சிக்காகவே விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்கள் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நேர்காணல் பேசுகையில், தி கோட் படத்தில் கிளைமாக்ஸில் நடிகர் விஜய்யும் தோனியும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொள்வது போலவும், அப்போது நடிகர் விஜய் தோனியிடம் ஆல் தி பெஸ்ட் ஃபார் தி பைனல் என்று சொல்லி விட்டு செல்வது போலவும், இருவரும் ஒரே காட்சியில் வருவது போலவும் யோசித்து வைத்திருந்தேன். அவர்கள் இருவரும் ஒரே காட்சியில் தோன்றுவது போல் திட்டமிட்டிருந்தேன் ஆனால் தோனிக்கு அந்த நேரத்தில் வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் அவரால் சூட்டிங்குக்கு வர முடியாத சூழ்நிலையில், தி கோட் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்று வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.





