நடிகர் யோகிபாபு, தமிழ் சினிமாவில் துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக சில படங்களில் காணப்படுவார். பிறகு அப்படியே சில படங்களில் காமெடி நடிகராக சில காட்சிகளில் நடிக்க துவங்கினார். அவரது உருவத்தோற்றம், தலைமுடி, முகம் வித்யாசமாக இருந்ததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி கிடைத்த வாய்ப்புகளை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
எனக்கே விபூதி அடிக்க பார்த்தே இல்லே நீ, என்ற அவரது காக்கா முட்டை படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் வசனம், இன்று வரை டிரண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும், நடிகர் விஷால் சாப்பிடும் போது செய்த வழிபாட்டு முறையை பார்த்த, சட்டென முகத்தை திருப்பி ஒரு பாவனை காட்டிய யோகிபாபு வீடியோ, சமீபத்தில் செமையாக வைரலாகி வரவேற்பை பெற்றது.
யோகிபாபு நடித்த படங்களில் கோலமாவு கோகிலா, ரெமோ, நாங்க ரொம்ப பிஸி, ஜெயிலர், டாக்டர், கலகலப்பு 2 படங்களில் காமெடி ரோல் மட்டுமின்றி மண்டேலா படத்தில், சலூன்கடை நடத்தும் இளிச்சவாயன் கேரக்டரில் நடிப்பில் நின்று விளையாடி இருந்தார் யோகிபாபு. இப்போது ஒரு படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
கடந்த 2020ம் ஆண்டில் நடிகர் யோகிபாபுவுக்கு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவரது திருமணத்தில் நெருங்கிய திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இப்போது யோகிபாபு – பார்கவி தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யோகிபாபு.
யோகிபாபுவின் தம்பி விஜயன். அவர் யோகிபாபு உடன் இருந்து அவரது கால்ஷீட் விவரங்களை கவனித்து வருகிறார். இந்நிலையில், முகநூல் வழியாக ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அந்த பெண் மைசூருவை சேர்ந்தவர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்கு பெண் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தம்பியின் காதல் விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட நடிகர் யோகிபாபு, பெண் வீட்டாரிடம் அவரே பேசியிருக்கிறார். அவரே நேரில் சென்று பெண் வீட்டாரிடம் சமாதானம் பேசி, அவர்களை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன்பிறகு தனது சொந்த ஊரான செய்யாறில் தனது தம்பி திருமணத்தை, கடந்த 3ம் தேதி சிறப்பாக முன்னின்று நடத்தி முடித்திருக்கிறார். தம்பியின் பேஸ்புக் காதலை, ஜெயிக்க வைத்து சொந்த வாழ்க்கையிலும் நாயகனாக ஜெயித்திருக்கிறார் காமெடி நடிகர் யோகிபாபு.





