நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில், இந்த படம் உருவாகி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, இதுவரை முடிவுக்கு வரவில்லை. இன்னும் இரண்டு மாத படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களாக லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால், விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் வரும் மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து விடுமாறு அஜித்குமார், ஏற்கனவே லைகா புரொடக்சன் நிறுவனத்திற்கும், படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனிக்கும் ஆர்டர் போட்டிருந்தார்.
இதையடுத்து, வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா புரடக்சன் நிறுவனம், அதற்கான பிஸினஸ்களை இப்போதே துவங்கி விட்டது. ஆகவே, பெரும்தொகை கைக்கு வந்துவிட்டால், விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கி விடும். அதனால் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள், டைரக்டர் மகிழ்திருமேனி தலைமையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விடாமுயற்சி படத்தை அடுத்து, மார்க் ஆண்டனி பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கில், மிகப்பெரிய பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம், ரூ. 5000 கோடி முதலீட்டில், 15க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
லைக்கா புரடக்சன் மூலம் எடுக்கப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு, நிதி நெருக்கடியால் தடைபட்டதால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் தயாரிப்பில் மட்டுமே இனிமேல் நடிக்க வேண்டும் என்ற முடிவில் அஜித்குமாரும் இருந்திருக்கிறார். இப்போது அதிலும் ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இரண்டு தயாரிப்பாளர்கள் உள்ளனர். இதில் ஒரு தயாரிப்பாளர், போன் ஒட்டு கேட்கப்பட்ட ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளார். இந்த புகாரில் விரைவில் போலீசாரால் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அவர் மீது போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் முடக்கப்பட்டு அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள அனைத்து படங்களும் முடக்கப்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் குட் பேட் அட்லி படத்துக்கும் சிக்கல் ஏற்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அஜித் படத்துக்கு முட்டுக்கட்டைகள் தொடர்வது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





