- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல டைரக்டருக்கு அடித்த ஜாக்பாட் பரிசு…. தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கப் போவது...

பிரபல டைரக்டருக்கு அடித்த ஜாக்பாட் பரிசு…. தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கப் போவது அவரா? – போடு வெடிய என குஷியான ரசிகர்கள்!

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்து வருகிறார். வருகிற மார்ச் மாதம் துவங்கும் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பில் இந்தி நடிகர் ஷாருக்கான் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் 10 நாட்கள் வரை படமாக்கப்பட உள்ளது. அதன்பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைகிறது.

ஜெயிலர் 2 படத்தை அடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். வரும் ஏப்ரலில் தலைவர் 173 ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது. குடும்ப டிராமாவாக பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகிறது.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தை முதலில் டைரக்ட் செய்ய இருந்தது இயக்குனர் சுந்தர் சி தான். அவர் விலகியதால் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ரஜினிகாந்த் சுந்தர் சி இடையே கதை விவாதத்தில் ஏற்பட்ட சிறு சங்கடம்தான் சுந்தர் சி விலகியதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை பொருத்த வரை முழுக்க முழுக்க ரஜினியின் விருப்பத்துக்கு கமல் விட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாகவே ரஜினிகாந்த் கமல்ஹாசன் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான் ஹீரோக்களின் படங்களில் நடிப்பது இன்றைய இளம் நடிகர்களின் நடிகைகளின் ஒரு பெரிய கனவாகவே இருக்கிறது. ரஜினி கமலுடன் நடித்தவர்கள் கூட மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்றும் கூறி வருகின்றனர்.

அதிலும் ஒரு சிலர் சம்பளம் இல்லாமல் கூட ஒரு காட்சியில் ரஜினி கமலுடன் நடித்தால் போதும் என்றும் கூறுவது வழக்கமாக உள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்டம் மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப்புக்கு கிடைத்துள்ளது. அவர் மலையாளத்தில் முன்னணி நடிகர் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு மகனாக பசில் ஜோசப் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

- Advertisement -

சற்று முன்