- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் என்றால் மோகன்லால் மம்முட்டி படங்களுக்கு கூட சிக்கல்தான் - ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த மலையாள...

விஜய் என்றால் மோகன்லால் மம்முட்டி படங்களுக்கு கூட சிக்கல்தான் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்!

- Advertisement -

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ் சுகுமாரன். இவர் சில வெற்றிப் படங்களையும் டைரக்ட் செய்திருக்கிறார். குறிப்பாக நடிகர் மோகன்லால் நடித்த லூசிபர், அதன் 2ம் பாகம் எல்2 எம்புரான் போன்ற படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. மேலும் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்தை இந்திய சினிமாவே கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கனா கண்டேன் என்ற படத்தில் அவர் வில்லனாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

தொடர்ந்து மொழி வெள்ளித்திரை சத்தம் போடாதே இராவணன் அபியும் நானும் காவியத் தலைவன் கண்ணாமூச்சி ஏனடா பாரிஜாதம் உள்ளிட்ட பல படங்களில் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். காதல் காமெடி ஆக்சன் பேமிலி சென்டிமென்ட் என எந்தவிதமான பாத்திரம் என்றாலும் அதில் மிக அசத்தலான நடிப்பை தருபவர் பிருத்விராஜ் என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து நடிகர் மற்றும் இயக்குனர் பிருத்விராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட தளபதி விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பு அதிகம். விஜய் படம் கேரளாவில் வெளியாகிறது என்ற தகவல் வந்தால் முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி படத்தைக் கூட ரிலீஸ் செய்ய மாட்டார்கள்.

கேரளாவில் விஜயை ஒரு அண்ணனாக கொண்டாடுகிறார்கள் என்று அந்த நேர்காணலில் நடிகர் பிருத்விராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். நடிகர் விஜய் நடித்த படங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும் போது ஓபனிங் டே கலெக்சன் என்பது மலையாளத்தில் நட்சத்திர நடிகர்களாக உள்ள மோகன்லால் மம்முட்டி படங்களை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக கேரளாவில் நடிகர்களை கொண்டாடும் மக்கள் கூட்டம் மிக குறைவுதான். அவர்களை தங்களை போன்ற சாதாரண மனிதர்களாக கருதும் அதே நேரத்தில் திரைப்பட கலைஞர்கள் என்று மதிக்கும் ஒரு மனநிலை தான் மக்களிடம் காணப்படுகிறது. ஆனால் நடிகர் விஜயை மட்டும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதும் அளவுக்கு கேரளம் மக்கள் விஜயை கொண்டாடுகின்றனர் என்று பிருத்விரதாஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்