- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜக எம்பியாக மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் வெற்றி, தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு தோல்வியை பரிசளித்த...

பாஜக எம்பியாக மலையாள நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் வெற்றி, தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு தோல்வியை பரிசளித்த மக்கள் – பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

தமிழக அரசியலை புரட்டிப் பார்த்தால் கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் சினிமா சார்ந்தவர்கள், தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார். துவக்கத்தில் திரைப்பட வசனகர்த்தாவாக இருந்த கருணாநிதி, புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், அதன்பிறகு புரட்சி செல்வியாக இருந்த ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தனர். இப்போது திமுக தலைமையில், ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. இவரும் ஓரிரு படங்களில் நடித்தவர்தான்.

ஒருவேளை திமுகவின் ஆட்சி இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் பட்சத்தில் ஸ்டாலின் வாரிசாக உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராக நீடிப்பார். அல்லது திமுக பலவீனமாகும் பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் அமோக ஆதரவை பெறும் பட்சத்தில், எதிர்காலத்தில் விஜய் தமிழக முதல்வராகவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினும் நடிகர்தான், விஜயும் நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழக அரசியலில் சினிமாக்காரர்களின் பங்கு நிறையவே இருந்து வந்திருக்கிறது. கமல்ஹாசன், விஜயகாந்த், சிவாஜி கணேசன், டி ராஜேந்தர், கே பாக்யராஜ், ராமராஜன், மன்சூர் அலிகான், கருணாஸ், நவரச நாயகன் கார்த்திக், சரத்குமார் என பலரும் அரசியல் களம் கண்டவர்கள்தான்.

இதில் இப்போது களத்தில் இருப்பவர்கள் கமல்ஹாசன், மன்சூர் அலிகான், சரத்குமார் போன்றவர்கள் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம், ஸ்லீப் மோடில் இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிட்டு டிபாசிட் இழந்தார். ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு 1.66 லட்சம் ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்தார்.

நாம் தமிழர் கட்சியை பொருத்தவரை நடிகர், இயக்குனர் அடையாளம் கடந்து ஒரு கட்சி தலைவராக மட்டுமே சீமான் பார்க்கப்படுகிறார். மக்களுக்கு பணம் தராமல், பரிசு பொருட்களை தராமல் மக்களின் அபிமானம் காரணமாக அதிக ஓட்டுகளை வாங்கிய சீமான்தான் இந்த முறை உண்மையான வெற்றியாளர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதனால் அவரை நடிகர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது.

அதே நேரத்தில் அருகில் உள்ள கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சுரேஷ்கோபி, மீண்டும் வெற்றி பெற்று எம்பி ஆகியிருக்கிறார். இவர் 2019ல் ஏற்கனவே வெற்றி பெற்று, 2வது முறையாகவும் மக்கள் வெற்றி பெற செய்திருக்கின்றனர். இதற்கு காரணம், கேரள மக்கள் சினிமா நடிகர்களை அரசியல்வாதியாக ஏற்பதில்லை. அதே நேரத்தில் சினிமா கடந்த ஒரு நல்ல அரசியல்வாதியாக சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளில் செயல்பட்டு இருக்கிறார். அதே போல், தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் நடிகர் விஜய் வசந்த் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் வெற்றி பெற்றதற்கும் அதுதான் காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சற்று முன்