- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் படத்தில் மாஸ் காட்டிய பிரபல வில்லன் நடிகர் கைது, நிஜத்திலும் இவர் வில்லனாகவே இருக்கிறாரே?...

ரஜினிகாந்த் படத்தில் மாஸ் காட்டிய பிரபல வில்லன் நடிகர் கைது, நிஜத்திலும் இவர் வில்லனாகவே இருக்கிறாரே? – அலப்பரை ஓவராக தான் பண்ணிட்டாரோ?

- Advertisement -

சினிமாவில் கதாநாயகன்கள் எப்படியோ அதே போல் வில்லன்களுக்கும் செம மாஸ் இருக்கிறது. குறிப்பாக எம்ஜிஆர் ஹீரோ என்றால் அங்கே வில்லனாக நம்பியார், அசோகன் போன்ற வில்லன்கள் இருந்தால்தான் படம் விறுவிறுப்பாக இருக்கும். அதுபோல் ரஜினிக்கு ரகுவரன், கமலுக்கு நாசர், விஜயகாந்துக்கு ஒரு ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என பல வில்லன் நடிகர்கள் நடிப்பில் அசத்தி இருக்கின்றனர்.

பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு வில்லன்கள்தான் காரணமாக இருப்பார்கள். வில்லன்கள் நடிப்பு எடுபடாமல் எத்தனையோ ஹீரோக்கள் படங்கள் படுதோல்வியை சந்தித்தது உண்டு. அதனால்தான் தி கோட் படத்தில் வில்லன் நடிப்பில் மோகனை நம்பாத வெங்கட்பிரபு, தளபதி விஜய்க்கு, இளைய தளபதி விஜயை வில்லனாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர், இந்த படத்தில் வர்மா என்ற வில்லன் கேரக்டரில் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். இந்த படத்தில் ரஜினியை போலவே வில்லன் நடிப்பில் செம மாஸ் காட்டியவர் விநாயகன் என்றால் அது மிகையல்ல.

படத்தில் அவர் வந்த பல காட்சிகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது கிண்டலான பேச்சும், கொடூரமான பார்வையும், ரஜினியை மிரட்டும் அந்த வேகமும், தன்னுடன் இருப்பவர்களையே சந்தேகப்பட்டு அடித்துக் கொலை செய்யும் காட்சிகளில் தனது சிறந்த நடிப்பின் முத்திரையை பதித்திருந்தார் மலையாள நடிகர் விநாயகன்.

- Advertisement -

ஆனால் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்காக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஆனால் அவர்களை விட முதலில் கார் பரிசு பெற வேண்டியவராக இருந்தவர் வில்லன் நடிகர் விநாயகன்தான் என ரசிகர்கள் கூறினர்.

ஆனால் மதுப்பழக்கம் உள்ள நடிகர் விநாயகன், அடிக்கடி குடிபோதையில் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி, சர்ச்சையில் மாட்டிக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. இன்று ஐதராபாத் சென்ற நடிகர் விநாயகன், அங்கு விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் குடிபோதையில் தகராறு செய்ததாக கைது செய்யபப்ட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்