- Advertisement -
Homeபொழுதுபோக்குமஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்த டாடா நடிகை... திரையுலகினர் வாழ்த்து...

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்த டாடா நடிகை… திரையுலகினர் வாழ்த்து…

- Advertisement -

திரை உலகிற்கு வந்த குறுகிய காலத்திலேயே, மிகப்பெரிய உயரத்தை தொட்டவர் நடிகை அபர்ணா தாஸ். கேரளாவில் பிறந்த இவர், கோவையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து இன்ஸ்ட்டாவில் வீடியோ வெளியிட்ட அபர்ணாவுக்கு 2018 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

- Advertisement -

ஞான் பிரகாசன் என்னும் திரைப்படம் மூலம் அவர் கேரள சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. குறிப்பாக, தமிழில் தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

- Advertisement -

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அபர்ணாதாஸ். அந்த திரைப்படத்தில், இரண்டாம் பாதியில் முழுவதும் விஜய் உடனே அவர் டிராவல் செய்வார். பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு பெரிதாக வசனம் இல்லை என்றாலும், தனது கண் பார்வையாலே ரசிகர்களை சம்பாதித்தார் அபர்ணாதாஸ். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் அபர்ணாதாசுக்கு ஒரு நல்ல தொடக்கமாகவே அமைந்தது.

 

இதனைத் தொடர்ந்து அவருக்கு டாடா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை கவின் உடன் கதாநாயகியாக நடித்தார் அபர்ணா தாஸ். ஒரு பக்கம் இளம் கல்லூரி மாணவி, இன்னொரு பக்கம் முதிர்ச்சி அடைந்த பெண் என இரு ரோலிலும் கலக்கி இருந்தார் அபர்ணாதாஸ்.

 

குறிப்பாக அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. கிளைமாக்ஸ் காட்சியில், தனக்கு மகன் இருக்கிறான் என்பதை அறிந்ததும் அவர் அவருக்கு காட்டிய நடிப்பு பாராட்டப்படும் வகையில் இருந்தது. டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் அபர்ணா. நிச்சயம் இவர் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலையாள நடிகர் தீபக் பரம் போலுடன் அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. தீபக் பரம்போல் சமீபத்தில் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

இந்த நிலையில் குருவாயூரில் உள்ள கோயிலில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. இந்து முறைப்படி, கேரளாவின் பாரம்பரியமான புடவையுடன் அசத்தலாக காட்சியளித்தார் அபர்ணா. பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்