- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா படத்தில் நானும் நடிக்கிறேன், பிரமோசன் நிகழ்ச்சியில் அறிவித்த மலையாள நடிகை - படத்துல மகளிர்...

சூர்யா படத்தில் நானும் நடிக்கிறேன், பிரமோசன் நிகழ்ச்சியில் அறிவித்த மலையாள நடிகை – படத்துல மகளிர் கூட்டம் அதிகமாகுதே…

- Advertisement -

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். இது அவரது 44வது படமாகும். இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் திரைக்கு வருகிறது. இந்த படம் கேங்க்ஸ்டர் கதைகளத்தில் உருவாகி உள்ளது.

ரெட்ரோ படத்தை அடுத்து நடிகர் சூர்யா தற்போது நடித்துவரும் படம் சூர்யா 45. நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் கடந்த அக்டோபர் இறுதியில் துவங்கியது. அங்குள்ள தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் ஒரு மாதத்துக்கு மேல் நடந்தது.

- Advertisement -

இந்த படத்தில் சூர்யா திரிஷா நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஷிவதா சுவாசிகா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். சென்னையில் கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. அய்யனார் சுவாமி பின்னணியில் கதைக்களம் உருவாகி உள்ளது.

ஏற்கனவே நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி இந்த படத்திலும் பக்தியை முன்னிலைப்படுத்திய கதையை உருவாக்கி வருகிறார். ஆண் தெய்வத்தை மையப்படுத்திய கதையில் முதன்முறையாக சூர்யா நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் சூர்யா 45 படத்தில் மலையாள இளம் நடிகை அனகா ரவி நடிப்பது உறுதியாகி உள்ளது. மலையாளத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை அனகா ரவி இப்போது ஆழப்புலா ஜிம்கானா என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகை அனகா ரவி, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 45வது படத்தில் நானும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். திரிஷா ஷிவதா சுவாசிகா வரிசையில் இப்போது அனகா ரவியும் இணைந்துள்ளதால், படத்தில் மகளிர் கூட்டம் கணிசமா அதிகரிக்குதே என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்