- Advertisement -
Homeபொழுதுபோக்குவீர தீர சூரன் படம் பார்க்க சத்யம் தியேட்டருக்கு நேரில் வந்த சியான் - படம்...

வீர தீர சூரன் படம் பார்க்க சத்யம் தியேட்டருக்கு நேரில் வந்த சியான் – படம் முடிந்த பிறகு விக்ரம் எடுத்த திடீர் முடிவு!

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தங்கலான். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறாமல் ஏமாற்றத்தை தந்தது. எனினும் இந்த படத்தில் சியான் விக்ரம் நடிப்பு வேற லெவலில் இருந்தது. கதை திரைக்கதையில் பா ரஞ்சித் சொதப்பியதால் படம் பெரிய வெற்றியை பெற முடியவில்லை.

இந்நிலையில் சேதுபதி சித்தா பண்ணையாரும் பத்மினியும் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்று கூறப்பட்டாலும் படத்துக்கு கிடைத்து வரும் கலவையான விமர்சனங்களால் வரும் நாட்களில் படத்தின் வசூல் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் விக்ரம் தரமான சம்பவம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வீர தீர சூரன் படம் நேற்று காலை ரிலீஸாக வேண்டிய நிலையில், ஓடிடி வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக டெல்லி உயர்நீதி மன்றம் இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை விதித்தது. பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, படத்தை மாலையில் ரிலீஸ் செய்ய கோர்ட் அனுமதித்து தடையை நீக்கியது. இதனால் காலை மதியம் காட்சிகளை பார்க்க முடியாமல் சியான் விக்ரம் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

- Advertisement -

நேற்று மாலை வீர தீர சூரன் படம் ரிலீஸான நிலையில் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் படத்தை காண நடிகர் சியான் விக்ரம் வந்திருந்தார். அப்போது தியேட்டருக்குள் இருந்த ரசிகர்கள் உற்சாக குரல் கொடுத்து விக்ரமை வரவேற்றனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயனும் தியேட்டருக்குள் இருந்ததால் இருவரும் அருகருகே அமர்ந்து படம் பார்த்தனர்.

படம் முடிந்த பிறகு நடிகர் சியான் விக்ரம் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அங்கிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் அவர் சிக்கிக் கொண்டார். விக்ரமை செல்பி எடுக்கவும் அவரை தொடவும் கை குலுக்கவும் கட்டிப் பிடிக்கவும் ரசிகர் கூட்டம் முண்டியடித்தது. இதனால் ரசிகர்களின் பிடியில் இருந்து தப்பிக்க, காரை வெளியே எடுத்து வர தாமதமானதால் அவ்வழியாக சென்ற ஒரு ஆட்டோவில் நடிகர் விக்ரம் ஏறிச் சென்றார். இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகராக இருந்துக்கொண்டு ஆட்டோவில் சென்ற அவரது எளிமையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பபட்டனர்.

- Advertisement -

சற்று முன்