- Advertisement -
Homeபொழுதுபோக்கு9 நாட்களில் மாமன் படம் இத்தனை கோடிகளை வசூலித்து விட்டதா? - சூரி கலக்கறாரே பா…...

9 நாட்களில் மாமன் படம் இத்தனை கோடிகளை வசூலித்து விட்டதா? – சூரி கலக்கறாரே பா… ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறுவது தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று நடந்து வருகிறது. நாகேஷ் சந்திரபாபு துவங்கி கவுண்டமணி வடிவேலு என நீடித்து இப்போது சந்தானம் யோகிபாபு சூரி என காமெடியன்கள் வரிசையில் ஹீரோக்களின் வரிசை நீண்டு வருகிறது.

அதிலும் கடந்த 2023ம் ஆண்டில் விடுதலை படம் மூலம் ஹீரோவான சூரி இப்போது தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் அவரை புடம் போட்ட பொன் போல, ஒரு நாயகனுக்குரிய அனைத்து அம்சங்களுடன் மெருகேற்றி நடிக்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

- Advertisement -

அதை அப்படியே பால பாடமாக பிடித்துக்கொண்ட நடிகர் சூரி தொடர்ந்து கருடன் படத்திலும் சொக்கன் கேரக்டரில் விசுவாசமான ஒரு வேலைக்காரனாக தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்து கொட்டுக்காளி படத்திலும் அவரது நடிப்பு நன்றாக இருந்தும் அந்த கதைக்களம் கதையின் ஓட்டம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.

எனினும் இப்போது மாமன் படத்தில் சூரி மீண்டும் தனது வெற்றியை நிரூபித்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்திய இந்த படத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரண் சுவாசிகா உள்ளிட்டோரின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளது.

- Advertisement -

நடிகர் சூரியை பொருத்த வரை இனி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவே நீடிப்பது என்ற முடிவில் இருக்கிறார். அதே நேரத்தில் பிரபலமான முன்னணி ஹீரோக்களின் படத்தில் காமெடி ரோல் செய்தாலும், நாயகனுக்கு சமமான ஒரு கேரக்டர் என்றால் அதிலும் நடிக்க தயார் என்கிறார். அந்த கேரக்டர் தனது ஹீரோ நடிப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என்று புது கண்டிசன் போடுகிறார் சூரி.

இந்நிலையில் நடிகர் சூரி எழுதிய மாமன் படத்தின் கதை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்த கதை வசனம் இயக்கம் நடிப்பு என அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த 16ம் தேதி வெளியான மாமன் படம் 24ம் தேதி வரை 9 நாட்களில் மொத்தம் 25 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. காமெடியன் சூரி ஹீரோவாக கலக்கறாரு பா என ரசிகர்கள் அவரை ஆச்சரியமாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்