ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் டாப் மோஸ்ட் கதாநாயகியாக வலம் வருகிறார். “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் அவர் நடித்த “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டார். தெலுங்கு, கன்னடம் என மாறி மாறி நடித்து வந்த அவர், “சுல்தான்” திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழில் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கில் “புஷ்பா 2”, ஹிந்தியில் “அனிமல்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் அவரது மேனேஜரே கைவரிசையை காட்டியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக பணியாற்றி வந்த நபர் ஒருவர், பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. பல நாட்களாக இந்த பண மோசடி நடந்து வந்திருக்கிறதாம். இதனை இப்போதுதான் ராஷ்மிகா அறிந்துகொண்டாராம். கிட்டத்தட்ட ரூ.80 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல நாட்களாக மேனேஜராக இருந்தவரே தன்னிடம் கைவரிசையை காட்டியுள்ள நிலையில் அவரை வேலையை விட்டே நிரந்தரமாக நீக்கிவிட்டாராம் ராஷ்மிகா. இவ்வாறு பல செய்திகள் வலம் வருகின்றன.
எப்போதும் நடிகர்/நடிகைகளுக்கு மேனேஜர் மிகவும் முக்கியம். அவர்களின் கால்ஷீட்டை கவனித்துக்கொள்வதில் மேனேஜருக்கு பெரும் பங்கு உண்டு. அதே போல் யாராவது இயக்குனர் நடிகர்/நடிகைகளை ஒப்பந்தம் செய்யவேண்டும் என்றால் அவர்களின் மேனேஜரின் மூலமாகதான் தொடர்புகொள்ளமுடியும். இவ்வாறு மிக முக்கிய பங்கை வகிக்கும் மேனேஜர் பொறுப்பில் இருப்பவர் மிகவும் விசுவாசமாக இருக்க வேண்டியது அவசயம். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் அவரிடமே பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





