- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தில் கதாநாயகி இவர்தான், அந்த 2 பேர் நிச்சயமா இருக்க வாய்ப்பில்லே -...

விஜய் 69 படத்தில் கதாநாயகி இவர்தான், அந்த 2 பேர் நிச்சயமா இருக்க வாய்ப்பில்லே – ஆனா இவங்க சென்சேஷனல் நடிகை ஆச்சேப்பா…!

- Advertisement -

நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர்கள் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, சுதீப், நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, ரம்யாகிருஷ்ணன், லைலா, கனிகா என பெரிய நட்சத்திர கூட்டமே படத்தில் நடித்துள்ளது.

தி கோட் படத்தில் இதுவரை 3 பாடல்கள், வெளிவந்துள்ளன. பர்ஸ்ட் சிங்கிளாக விசில்போடு, செகண்ட் சிங்கிளாக சின்ன சின்ன கண்ணிலே ஆகிய பாடல்களை தொடர்ந்து நேற்று முன்தினம், தேர்டு சிங்கிளாக நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என்ற பாடலும் வெளியானது.

- Advertisement -

இதுவரை வெளியான 3 பாடல்களுமே ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதே இல்லை. இசையில் தி கோட் படத்தில் பெரிய ஈர்ப்பை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் கொண்டுவர முடியவில்லை. படத்துக்கு மிகப்பெரிய பலமே பாடல்களும், பின்னணி இசையும்தான். இப்படி ஈர்ப்பு இல்லாத இசையால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி நடிகர் விஜயை மிக இளமையான தோற்றத்தில் காட்டுகிறேன் என டீஏஜிங் தொழில்நுட்பத்தில், இந்த 3வது பாடலில் காட்டியுள்ளனர். வழக்கமான அழகான தோற்றத்தை சிதைத்து, விஜயை அவரது ரசிகர்களே விரும்பாத அளவுக்கு ஹேர்ஸ்டைல் மற்றும் தாடி, மீசை வைத்து வெங்கட்பிரபு அலங்கோலப்படுத்தி விட்டதாக, ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே விஜய் அடுத்து நடிக்கும் 69வது படம் குறித்த அப்டேட்டுகளும் வர ஆரம்பித்துள்ளன. இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது. இந்த படத்துடன் விஜய் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, தவெக கட்சியில் முழுநேர அரசியல்வாதியாக மாறி தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார்.

விஜயின் 69வது படத்தில் திரிஷா அல்லது சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக முதலில் தகவல்கள் வௌியாகின. ஆனால் இப்போது பிரேமலு படத்தில் நடித்த சென்சேஷனல் நாயகி மமிதா பைஜூதான் விஜய்க்கு இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. அதனால் திரிஷா, சமந்தா இருவருக்கும் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்