- Advertisement -
Homeபொழுதுபோக்கு32 ஆண்டுகளாக இளையராஜாவை புறக்கணித்த இயக்குனர் மணிரத்னம், ஏஆர் ரகுமானுடன் கைகோர்த்த கதை தெரியுமா? -...

32 ஆண்டுகளாக இளையராஜாவை புறக்கணித்த இயக்குனர் மணிரத்னம், ஏஆர் ரகுமானுடன் கைகோர்த்த கதை தெரியுமா? – அவரே சொன்ன பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். தமிழ் சினிமாவின் அடையாளமாக இயக்குனர் மணிரத்னத்தை கூறுவதுண்டு. ஏனெனில் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக மணிரத்னம், தனது படைப்புகளை ஆரம்பம் முதல் தந்து வருகிறார்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. குறிப்பாக ரோஜா, பம்பாய், தளபதி, நாயகன், அக்னி நட்சத்திரம், மௌனராகம் போன்ற பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருக்கின்றன. சமீபத்தில் அவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளிவந்தது.

- Advertisement -

முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் 4 தேசிய விருதுகளை பெற்றது.மணிரத்னம் ஆரம்ப காலத்தில் இயக்கிய பல படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான். பகல் நிலவு, இதய கோவில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, தளபதி என தொடர்ச்சியாக மணிரத்னம் இயக்கிய படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

ஆனால் ரோஜா படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க தொடங்கிய பிறகு மணிரத்னம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் கடந்த 32 ஆண்டுகளாக ஏஆர் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார். கடந்த 32 ஆண்டுகளாக இளையராஜாவை புறக்கணித்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.

- Advertisement -

ரோஜா படத்தில் இசையமைக்க ஒருமுறை இளையராஜாவை பார்க்க சென்ற இயக்குனர் மணிரத்னத்தை, மரத்தடியில் மணிக்கணக்கில் காத்திருக்க செய்திருக்கிறார் இளையராஜா. இதையறிந்த இயக்குனர் கே பாலசந்தர், அங்கு சென்று தனது காரில் மணிரத்னத்தை அழைத்து வந்திருக்கிறார். அப்போதுதான் ஏஆர் ரகுமான் குறித்து கே பாலசந்தர் கூறி, பரிந்துரை செய்து ரோஜா படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் உள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் கூறுகையில், இளையராஜா, ஏஆர் ரகுமான் இருவருமே இசையில் மிகப்பெரிய ஜீனியஸ். சினிமாவில் இவர்களைப் போல் நேர்த்தியான கலைஞர்களை எளிதில் காண முடியாது. இவர்கள் இருவருமே எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர்கள்தான். ஆனால் ஏ ஆர் ரகுமான் இசைக்கு என்னுடைய திரைப்படங்கள் மாறியது. அந்த காரணங்களுக்காகதான் நான் இவருடன் பணியாற்றுகிறேன். மற்றபடி இளையராஜாவை வேண்டும் என்றே நான் எந்த படத்திலும் நிராகரித்தது கிடையாது. இளையராஜாவுக்கு இணை அவரேதான் என்று கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்