- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் நாகேஷூக்கு அப்புறம் நீதான்… அந்த விஷயத்துக்காக நடிகர் மணிகண்டனை வெளிப்படையாக பாராட்டிய பிரபல இயக்குனர்!

நடிகர் நாகேஷூக்கு அப்புறம் நீதான்… அந்த விஷயத்துக்காக நடிகர் மணிகண்டனை வெளிப்படையாக பாராட்டிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருபவர் நடிகர் மணிகண்டன். ஆரம்பத்தில் அவர் ப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து பல படங்களில் பின்னணி குரலில் பேசியிருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அவர் டப்பிங் பேசியிருக்கிறார். பிறகு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து இளம் நடிகராக வளர்ந்து வருகிறார். குறிப்பாக காலா ஜெய்பீம் நெற்றிக்கண் குடும்பஸ்தன் லவ்வர் குட்நைட் ஏலே உள்ளிட்ட பல படங்களில் நடிகர் மணிகண்டன் நல்ல திரைக்கலைஞராக தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக குட் நைட் லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என தொடர்ந்து 3 ஹிட் படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். மணிகண்டன் பல நடிகர்களின் குரலில் அட்சரம் பிசகாமல் பேசும் சிறந்த மிமிக்ரி கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவரை காந்தாரா சாப்டர் 1 படத்தில் தனக்கு பின்னணி பேச வைத்திருந்தார் படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, நான் ஆரம்பத்தில் சில குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அதில் நான் ஒரு குறும்படத்தில் திக்குவாய் பாதிப்பு உள்ளவனாக பேசி நடித்திருந்தேன். ஒரு நாள் நான் திக்குவாய் கேரக்டரில் நான் நடித்த குறும்படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் பார்த்திருக்கிறார்.

- Advertisement -

அந்த படத்தில் என் நடிப்பை பார்த்துட்டு, அந்த பையனை நான் இப்பவே பார்க்கணும் என்று சொல்லி கூப்பிட சொல்லி இருக்கிறார். அவர் என்னை பார்க்க விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்ததும் நான் அவரது அலுவலகத்துக்கு உடனே போனேன்.

அவர் என்னைப் பார்த்த உடனே நிஜமாகவே உனக்கு திக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்டார். நான் இல்லைன்னு சொன்னேன். அப்புறம் எப்படி இப்படி நடிச்சே? நாகேஷ் பண்ணுவாண்டா இப்படி. அதுக்கப்புறம் நான் யாரும் இப்படி நடிச்சு பார்க்கல டான்னு சந்தோஷமா சொன்னார். எனக்கு இப்போ இதை சொல்றதுக்கு கூட கூச்சமா இருக்குது என்று நடிகர் மணிகண்டன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்