- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தோட டைட்டிலே மாஸ் காட்டுதே… நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...

படத்தோட டைட்டிலே மாஸ் காட்டுதே… நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் – தயாரிப்பாளர், டைரக்டர் யாரு தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியாக 3 படங்களை ஹிட் படங்களை அவர் தந்திருக்கிறார். மணிகண்டன் நாயகனாக நடித்த குட் நைட் லவ்வர் குடும்பஸ்தன் ஆகிய 3 படங்களுமே தொடர்ச்சியாக மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக ஆரம்பத்தில் இருந்த நடிகர் மணிகண்டன் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார். மேலும் பல படங்களில் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருந்திருக்கிறார். மேலும் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் மணிகண்டன் பணிசெய்திருக்கிறார். பிறகுதான் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

சமுத்திரக்கனியுடன் ஏலே படத்திலும் நயன்தாராவுடன் நெற்றிக்கண் படத்திலும் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்த மணிகண்டன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஜெய்பீம் படத்திலும் மணிகண்டன் நடிப்பு பெரிய அளவில் கவனமும் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தின் பிரமோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் நெல்சன் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் இயக்குனராகவே வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் மணிகண்டனும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

மேலும் இப்போது குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் என 3 வெற்றிப் படங்களை தந்த நடிகர் மணிகண்டன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிசெய்த சந்தோஷ்குமார் டைரக்ட் செய்கிறார்.

இந்த படத்தின் பெயர் மக்கள் காவலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் மணிகண்டன் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சாதி ரீதியாக நடக்கும் அரசியலை மையமாக கொண்ட கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நிச்சயமாக இதுவும் மணிகண்டனின் வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்