- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம் படம், எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா? - பிரச்னை எல்லாம்...

நடிகர் ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம் படம், எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா? – பிரச்னை எல்லாம் சால்வ் ஆகி விட்டதா பாஸ்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல நடிகராக இருந்து வருபவர் ரஞ்சித். கதாநாயகன், வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர். குறிப்பாக பாரதி கண்ணம்மா, பசுபதி மே/பா ராசக்காபாளையம், நேசம் புதுசு, சபாஷ், மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் ரஞ்சித் நடிப்பு சிறப்பாக இருந்தது.

தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் நிறைய படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். சமீபகாலமாக அரசியல் கட்சிகளிலும் ஆர்வம் காட்டி வரும் ரஞ்சித், நடிகை பிரியா ராமனை காதல் திருமணம் செய்துக்கொண்டார். பிறகு அவரை பிரிந்து, ராகசுதா என்ற நடிகையை இரண்டாவது திருமணம் செய்தார். இப்போது மீண்டும் பிரியாராமனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில், கவுண்டம்பாளையம் என்ற படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரஞ்சித். அவரே இந்த படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். நாடக காதல் என்ற பெயரில், இன்றைய இளம் காதலர்களின் காதலை மையப்படுத்தி இந்த படத்தை ரஞ்சித் இயக்கி உள்ளார். குறிப்பாக டீன் ஏஜ் பெண்களை ஏமாற்றும் இளைஞர்களை பற்றிய படமாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படம் சாதி பேசுகிற படமாக இருக்கிறது. இந்த படத்தை வெளியிட்டால், திரையரங்குகளில் கலாட்டா, பிரச்னை செய்வோம் என்று சிலர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் ரிலீஸ்க்கு முந்தைய நாள், நிறுத்தப்பட்டது.

- Advertisement -

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், தியேட்டர்கள் பாதுகாப்பு மிக முக்கியம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதால், இந்த படம் ரிலீஸ் ஆகாது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டு படத்தை விரைவில் வெளியிடச் செய்வேன், என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வருகிற 9ம் தேதி கவுண்டம்பாளையம் படம் ரிலீஸ் ஆகும் என்று நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார். வருகிற 9ம் தேதி பிரசாந்த் நடித்த அந்தகன், ராம வேலமூர்த்தியின் வீராயி மக்கள், மின்மினி ஆகிய படங்களுடன் ரஞ்சித் நடித்த கவுண்டம்பாளையம் படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முன்பை விட குறைந்த தியேட்டர்களில்தான் இந்த படம் வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்