- Advertisement -
Homeபொழுதுபோக்கு38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த் படம் - இது வேற...

38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த் படம் – இது வேற லெவல் படமாச்சே என குதூகலித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல வெற்றிப் படங்களில் அவருக்கு மிகப்பெரிய அபாரமான வெற்றியை கொடுத்த படம் மனிதன். கடந்த 1987ம் ஆண்டில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரஜினியின் மாஸ் ஹிட் படங்களில் ஒன்றாகும். இந்த படம் 25 வாரங்கள் தியேட்டர்களில் ஓடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதன் படத்தில் ரஜினியுடன் ரூபிணி ஜோடியாக நடித்திருந்தார். மேலும் வினு சக்ரவர்த்தி சோ ரகுவரன் செந்தில் ஸ்ரீவித்யா ஜெய்கணேஷ் மாதுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஏவிஎம் புரொடக்சன் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை் பெற்றன.

- Advertisement -

குறிப்பாக வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன், காளை காளை முரட்டுக்காளை ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் போன்ற பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட பாடல்களாக இருந்தன. இப்போதும் வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன் பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் பாடலாக இருந்து வருகிறது.

கடந்த 1975ம் ஆண்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகர் ரஜினிகாந்த் இப்போது தமிழ் சினிமாவில் தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். அவரது பொன்விழா ஆண்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் விரைவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழாவுக்கு பிறகு இந்த விழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் கூறியிருந்தார்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மனிதன் படம் மீண்டும் திரைக்கு வருகிறது. 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மனிதன் படத்தை பொலிவுபடுத்தி 38 ஆண்டுகளுக்கு பிறகு படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

மனிதன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. குருராஜா இன்டர்நேஷனல் நிறுவனம் மனிதன் படத்தை ரி ரிலீஸ் செய்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980களில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் மனிதன் படம் மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாகும். மீண்டும் மனிதன் படத்தை தியேட்டரில் காண ரஜினி ரசிகர்கள் இப்போது ஆர்வமாக இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்