- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது உங்களுக்கு அசிங்கமா இல்லையா? - நடிகர் கமல்ஹாசனிடம் நேரடியாக கேட்ட பிரபல இயக்குனர்!

இது உங்களுக்கு அசிங்கமா இல்லையா? – நடிகர் கமல்ஹாசனிடம் நேரடியாக கேட்ட பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவரது இயக்கத்தில் வெளியான சின்னதம்பி பெரியதம்பி 100வது நாள் அமைதிப்படை வாழ்க்கை சக்கரம் 24 மணி நேரம் போன்ற பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெள்ளி விழா படங்களாக இருந்தன.

ஒரு கட்டத்தில் இயக்குனர் மணிவண்ணன் நடிகராக மாறினார். காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மாயாண்டி குடும்பத்தார் உள்ளத்தை அள்ளித்தா ஜானகிராமன் படையப்பா அவ்வை சண்முகி காதல் கோட்டை ஒன்ஸ்மோர் குருவி என பல படங்களில் மணிவண்ணன் நடித்தார்.

- Advertisement -

இயக்குனர் மணிவண்ணன் தனது படங்களில் பகுத்தறிவு காட்சிகளை அதிகமாக வைத்திருப்பார். குறிப்பாக சத்யராஜ் ஹீரோவாக நடித்த அவரது படங்களில் கடவுள் சார்ந்த கருத்துகளும் சமூக மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் அதில் சற்று அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவில் அரசியலை அமைதிப்படை படம் வாயிலாக நையாண்டி செய்த ஒரே இயக்குனர் மணிவண்ணன்தான். இதுவரை தமிழ் சினிமாவில் வந்த அரசியல் படங்களில் இந்த அளவுக்கு அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் ஒரு படத்தை யாரும் தரவில்லை. அப்படியே அது இருந்தாலும் அது அமைதிப்படை படம் தந்த ஒரு துணிச்சல்தான் என்றும் தாராளமாக சொல்லலாம்.

- Advertisement -

சமீபத்தில் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1997ம் ஆண்டில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இந்தியா வருகை தந்தார். அப்போது கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படப்பிடிப்பை ராணி தான் துவக்கி வைத்தார். இந்த விழாவில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர்கள் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் இயக்குனர் மணிவண்ணனையும் பங்கேற்க கமல் அழைத்துள்ளார். ஆனால் மணிவண்ணன் வர முடியாது என மறுத்துள்ளார். அவங்க சுதந்திரப் போராட்டத்தில் நம்மள அடிச்சு விரட்டினவங்க. அவங்களை மறுபடியும் மகாராணின்னு நீ கூட்டிட்டு வருவே? நான் அவங்க முன்னாடி வந்து தலை குனிஞ்சு நிக்கணுமா? இது அசிங்கமா இல்லையா? என்று கமல்ஹாசனிடம் மணிவண்ணன் கோபமாக கேள்வி கேட்டுள்ளார். இப்போது அந்த சம்பவம் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்