- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜயால் பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவுக்கு இப்படி ஒரு பெருமையா? - இணையத்தில்...

தமிழக முதல்வர் விஜயால் பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவுக்கு இப்படி ஒரு பெருமையா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகை மனோரமா. பழம்பெரும் நடிகையான இவர் ரசிகர்களால் ஆச்சி என்று அழைக்கப்படுபவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் படங்களில் தொடங்கி ரஜினி கமல் சரத்குமார் சத்யராஜ் படங்களில் நடித்து விஜய் அஜீத்குமார் சூர்யா போன்ற இன்றைய தலைமுறை ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் ஆச்சி மனோரமா.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த நடிகர் நடிகைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆச்சி மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பழைய படங்களில் மனோரமா நடிகர் நாகேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

- Advertisement -

அதேபோல் மற்ற எந்த நடிகர், நடிகைகளுக்கும் கிடைக்காத இன்னொரு பெருமையும் பழம்பெருமை நடிகை மனோரமாவுக்கு இருக்கிறது. அது நடிகை மனோரமா தமிழ்நாட்டில் ஆட்சி செய்த 6 முதலமைச்சர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்தவர் என்பதுதான்.

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் மனோரமா நடித்திருக்கிறார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோருடன் ஆச்சி நடித்திருக்கிறார். அதே போல் எம்ஜிஆர் என்டிஆர் ஜெயலலிதா போன்றவர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் மனோரமா நடித்திருக்கிறார். மேலும் கருணாநிதி கதை வசனம் எழுதிய ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் உடன் இணைந்து ஆச்சி மனோரமா நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். இதையடுத்து ஆச்சி மனோரமா ஏழு முதல்வர்களுடன் இணைந்து நடித்து அவர்களுடன் திரைப்படங்களில் பணியாற்றியவர் என்ற சாதனையை பெற்றிருக்கிறார். நடிகர் விஜயுடன் ரசிகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த மனோரமா அதிக படங்களில் விஜயுடன் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் ஆச்சி மனோரமா இறந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் தமிழக முதல்வராக சில தினங்களுக்கு முன்பு விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில் மறைந்த ஆச்சி மனோரமா மீண்டும் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். இதற்கு முதல்வர் விஜயும் சினிமாவில் இருந்து துணிச்சலாக அரசியல் களத்தில் இறங்கி இப்போது ஜெயித்து முதல்வராகி, ஒரு காரணமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்