- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் அப்படி என்ன பண்ணிட்டாரு, அவர் படத்துலதான் அப்படி, ஆனால் நிஜத்துல? சூப்பர் ஸ்டாரின் மற்றொரு...

ரஜினிகாந்த் அப்படி என்ன பண்ணிட்டாரு, அவர் படத்துலதான் அப்படி, ஆனால் நிஜத்துல? சூப்பர் ஸ்டாரின் மற்றொரு முகத்தை ஓப்பனாக போட்டுடைத்த மன்சூர் அலிகான்

- Advertisement -

ரஜினிகாந்த் இந்திய சினிமாவை பொறுத்த வரை புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பல வருடங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். பல வருடங்களாக ‘இப்போது வருவார், அப்போது வருவார்’ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக சில வருடங்களுக்கு முன்பு, “அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம், தேதி பின்னால் அறிவிக்கப்படும்” என்று கூறினார். பல காலமாக காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். அந்த சமயத்தில் பல அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார் ரஜினிகாந்த். அதன் மூலம் அவர் பல விமர்சனங்களையும் சம்பாதித்தார்.

- Advertisement -

குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற ரஜினிகாந்த், அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம், “போராட்டம் போராட்டம்ன்னு இருந்தா நாடே சுடுகாடு ஆகிடும்” என்று கூறினார். இது அவர் மீது ஒரு நெகட்டிவ் ஆன பிம்பத்தை உருவாக்கியது. அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கைக்கு துணை போகிறார் எனவும் பேச்சுக்கள் அடிபட்டன.

அதனை தொடர்ந்து ஒரு நாள் தனது உடல்நிலைக் காரணமாக கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மன்சூர் அலிகான், ரஜினிகாந்தை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

“ரஜினிகாந்த் ஒரு உச்ச நட்சத்திரம். அவர் படங்களில் மட்டுந்தான் ஹீரோவாகவும் சூப்பர் ஸ்டாராகவும் இருக்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படி இல்லை. அவர் நிஜத்திலும் சூப்பர் ஸ்டாராக இருக்க நான் ஆசைப்பட்டேன். தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் அவர் ஏதாவது செய்வார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்பதுதான் எனக்கு கோபம்” என கூறியுள்ள அவர்,

“ரஜினிகாந்த் தனது படங்களில் இடதுசாரியாக நடிக்கிறார். ஆனால் நிஜத்தில் வலதுசாரியாக இருக்கிறார். அதுதான் எனக்கு பிரச்சனை” என்று அப்பேட்டியில் மன்சூர் அலிகான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்