- Advertisement -
Homeபொழுதுபோக்குஅயலான் பட விவகாரத்தில் சிவகார்த்திகேயனுக்கு தொடரும் சோகம்... ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், படத்தை...

அயலான் பட விவகாரத்தில் சிவகார்த்திகேயனுக்கு தொடரும் சோகம்… ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும், படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இதற்கு முன்பாக கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சிவகார்த்திகேயன் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதில் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அநேகமாக மே மாதம் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாசுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இந்தத் திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் ஜூலை மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக சோதனை முயற்சியில் சில கதைகளில் நடித்து வருகிறார். அதில் உதாரணத்திற்கு மாவீரன் திரைப்படத்தை கூறலாம். சூப்பர் ஹீரோ கதை என்றாலும் அது சொல்லப்பட்ட விதம், மிகவும் வித்தியாசமாக அந்த திரைப்படத்தில் இருந்தது. எப்போதுமே காமெடி கலந்த ரூட்டில் கவனம் செலுத்தும் சிவகார்த்திகேயன், இந்த முறை அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்திருந்து அசர வைத்தார்.

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று 80 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் திரைப்படமும் சோதனை முறையிலான ஒரு படமே என்று கூறலாம். இதில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக உருவெடுக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் நடுவே சமீபத்தில் பொங்கல் திருநாள் அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது.

- Advertisement -

இதனை இன்று நேற்று நாளை படத்தை எடுத்திருந்த ரவிக்குமார் இயக்கி இருந்தார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த திரைப்படம், பொருளாதாரப் பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து சொன்ன தேதியில் வெளியானது. ஏலியன் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை.

குடும்ப ஆடியன்ஸ்கள் ஆதரவு கொடுத்ததால், அயலான் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அதனை தெலுங்கில் டப்பிங் செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்றன. இதற்கான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஜனவரி 26 ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை அது நடக்கவில்லை. படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சட்ட ரீதியான சில பிரச்சனைகள் இருப்பதன் காரணமாகவே இந்த தாமதம் என்று கூறப்படுகிறது. தெலுங்கிலும் அயலான் திரைப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்த சூழலில், தற்போது அது வெளியாகாமல் இருப்பதால் சிவகார்த்திகேயன் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்