- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்துல வெங்கட்பிரபு பெரிய தில்லாலங்கடி செய்திருக்காராமே? படத்துல எல்லாமே அதுதானாம் - அப்போ பிரசாந்த்...

கோட் படத்துல வெங்கட்பிரபு பெரிய தில்லாலங்கடி செய்திருக்காராமே? படத்துல எல்லாமே அதுதானாம் – அப்போ பிரசாந்த் தான் ஹீரோவா?

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம், சுருக்கமாக GOAT (கோட்) என்று கூறப்படுகிறது. சென்னை 28, கோவா, சரோஜா, மங்காத்தா, மாநாடு ஆகிய 5 வெற்றிப் படங்களை தொடர்ந்து, வெங்கட்பிரபு பெரிய எதிர்பார்ப்பில் இயக்கிய படம்தான் கோட். அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய்க்கும், சினிமாவில் அடுத்த நகர்வுக்கு வெங்கட்பிரபுவுக்கும் மிக முக்கியமான படமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என 2 கேரக்டர்களில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு சினேகா ஜோடியாகவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரி ஜோடியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் பிரசாந்த், நடிகர் மைக் மோகன் ஆகியோர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். படத்தில் அவர்களது கேரக்டர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

டைம் டிராவல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இளமையான வயதில் விஜயை காட்ட, டீ ஏஜிங் முறையில் விஜய் கெட்டப் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மீசை தாடியின்றி, தலையில் நீளமான முடிக்கற்றைகளுடன் இருக்கும் கெட்டப், பார்ப்பதற்கே அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்து. இது படத்திலும் இப்படியே இருந்தால் அதை ரசிக்கவே முடியாது என்றுதான் பலரும் முகம் சுளிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் பல காட்சிகளில் டூப் நடிகர்களை வைத்தே வெங்கட்பிரபு எடுத்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. குறிப்பாக விஜய் நடிக்க வேண்டிய பல காட்சிகள், விஎப்எக்ஸ் முறையில், கிரீன் மேட் பின்னணியில் எடுக்கப்பட்டதாகவும், அவரது க்ளோசப் ஸாட்களில் மட்டுமே அவர் பங்கேற்றதாகவும் மற்ற காட்சிகள் டூப் நடிகர்களை கொண்டு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதனால்தான் அமெரிக்காவில், விஜயை வைத்து பலவிதமான ஸ்பெஷல் ஷூட் நடத்தப்பட்டு, அதை முன்பு எடுக்கப்பட்ட டூப் காட்சிகளுடன் இணைத்து, உண்மை போல திரையில் காட்டும் விதமாக, வெங்கட்பிரபு பல தந்திர முறைகளை, அதாவது தில்லாலங்கடி வேலைகளை செய்திருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஆக, இந்த படத்தை பொருத்த வரை தொழில்நுட்பமே பெரிதாக இருக்கும் என்றும் நடிகர், நடிகைகளை காட்டிலும் இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகளையே வெங்கட்பிரபு பெரிதாக நம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல் மங்காத்தா படத்தில் ஹீரோ அஜீத்தை விட அர்ஜூனை கெத்தாக காட்டியது போல, விஜயை டம்மியாக்கி, பிரசாந்தை கெத்தாக வெங்கட்பிரபு காட்டியிருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் நான் விஜய் படத்தில் நடிக்கவில்லை, விஜயுடன் நடிக்கிறேன், மிக முக்கியமான கேரக்டர் என பிரசாந்த் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்