தமிழ் திரையுலகை கடந்து கேரளா கர்நாடகா ஆந்திர திரை உலகிலும் இங்குள்ள நடிகர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் குறிப்பாக நாம் தளபதி விஜயை கூறலாம். அவருக்கு கேரளத் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதேபோல் தமிழ் சினிமாவில் பிறமொழி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது என்பது மிக மிக குறைவு தான்.
இருப்பினும் அதில் தனித்துவமாக திகழ்ந்து வருபவர் பகத் பாசில். அவருக்கென ஒரு ரசிகர்கள் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இதனால் அவர் நடிக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு இங்கு தனி மவுசு உண்டு. சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதில் ஒரு மார்க்கெட்டிங் வில்லனாக நடித்த அவர் தனது பங்கை சிறப்பாக செய்து முடித்தார். பிறகு பகத் பாஸிலுக்கு சூப்பராக அமைந்த திரைப்படம் விக்ரம். சொல்லப்போனால் இந்த திரைப்படத்தின் முதல் பாதி, பகத் பாஸிலை சுற்றியே நகரும். கமல் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் வந்து போக, கதையை நகர்த்தும் காரணியாக பாசில் இருப்பார்.
இதனைத் தொடர்ந்து அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தில் வைகைப்புயல் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்தாலும் பகத் பாசனின் கேரக்டரை பலரும் ரசித்தார்கள். சாதியை கொடி பிடித்து தூக்கும் அந்த ரத்தினவேல் கதாபாத்திரம், இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
தொடர்ந்து பகத் பாஸில் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் வெளிவந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் பகத் பாசிலுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் வைகைப்புயலுடன் இணைந்து அவர் மாரீசன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு எதிரும் புதிருமான கேரக்டர்களுடன் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரையிலான பயணத்தை தான் இந்த திரைப்படம் விவரிக்கிறது. சுதீஸ் சங்கர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ஜூலை மாதம் இந்த திரைப்படம் வெளியாகிறது. இதற்கான போஸ்டரில் இருவரும் எதிரெதிரே நிற்பது போன்ற புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.





