- Advertisement -
Homeபொழுதுபோக்குபைசன் திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்... புதிய தகவல்களை பகிர்ந்த மாரி செல்வராஜ்...

பைசன் திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும்… புதிய தகவல்களை பகிர்ந்த மாரி செல்வராஜ்…

- Advertisement -

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அங்கிருந்து கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதில் வாழை திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

 

- Advertisement -

தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் சிறுவர்களை மையப்படுத்தி இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஸ்னி ஹாட் ஸ்டார் இதன் திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. முதலில் இது ஓடிபி தளத்தில் வெளியாவதாக தான் இருந்தது. பின்னர் அதற்கான திட்டம் மாற்றப்பட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

 

- Advertisement -

தற்போது இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மாரி செல்வராஜ். சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். கபடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

 

இதில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இதுபோக, ரஜிஷா விஜயன், லால், பசுபதி, கலையரசன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இதற்கான பட பூஜை, திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மனத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை தான் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுப்பதாக கூறப்பட்டு வந்தது.

 

பைசன் என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஏ ஆர் ரகுமான், சந்தோஷ் நாராயணனுடன் மாரி செல்வராஜ் பணி புரிந்திருந்த வேளையில் தற்போது புது கூட்டணியில் இணைந்து இருக்கிறார். இப்படியான சூழலில் பைசன் குறித்து பல்வேறு தகவல்களை மாரி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது,

 

பைசன் திரைப்படம் பயோபிக் அல்ல, இது ஒரு புனைவு கதை. திருநெல்வேலியில் 60 நாட்கள் படப்பிடிப்பை எடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதன் பிறகு சென்னையில் படத்தின் சூட்டிங் நடைபெறும். எனக்கு இந்த திரைப்படத்தில் புதிய கூட்டணி தேவைப்பட்டது. அதற்காகத்தான் நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்திருக்கிறேன். பைசன் படத்திற்கு கீழே காளமாடன் என்ற வாசகம் உள்ளது. இதற்கான அர்த்தம், படம் வெளியான பிறகு உங்களுக்கு தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்