- Advertisement -
Homeபொழுதுபோக்குபைசன் படத்திற்காக இப்படி ஒரு தியாகத்தை செய்த துருவ் விக்ரம்... மெய் சிலிர்த்து பாராட்டிய மாரி...

பைசன் படத்திற்காக இப்படி ஒரு தியாகத்தை செய்த துருவ் விக்ரம்… மெய் சிலிர்த்து பாராட்டிய மாரி செல்வராஜ்… அப்புறம் சீயான் மகன் என்றால் சும்மாவா…

- Advertisement -

நடிப்பு ராட்சசன் என பெயர் பெற்றவர் சீயான் விக்ரம். விஜய் அஜித் உடன் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை அவர் தொடங்கினாலும், சேது திரைப்படம் தான் அவரை ரசிகர்கள் ஊரறிய செய்தது. இங்கிருந்து தனது வெற்றி பயணத்தை தொடங்கிய விக்ரம், இன்று மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

 

இவரது மகன் துருவ் விக்ரமும் வெள்ளித் திரையில் தோன்றுவதற்காக விருப்பம் தெரிவிக்க, தனது ஆசான் பாலா இயக்கத்திலேயே முதல் திரைப்படத்தில் நடிக்க வைத்தார் சியான் விக்ரம். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இது எடுக்கப்பட்டது. வர்மா என்ற டைட்டிலோடு வெளியான இந்த திரைப்படத்தைப் பார்த்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அதன் மீது திருப்தி இல்லை.

 

இதனால், மீண்டும் இந்தப் படத்தை இயக்குவதற்கு முடிவு செய்தது. இது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியாக, அர்ஜுன் வர்மா என்ற பெயரில் வேறு ஒரு இயக்குனரின் கீழ் துருவ் விக்ரம் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த திரைப்படம் சரியாக போகவில்லை. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தின் மகான் திரைப்படத்தில் நடித்தார் துருவ்.

 

தந்தை மகன் இருவரும் போட்டி போட்டு நடித்த அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டதால் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இந்த நிலையில் தான் தனது அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில், பைசன் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

 

இந்தப் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, துருவ் என்னை மிகவும் நம்புகிறான். அதுவே எனக்கு பயமாக இருக்கிறது. இந்த பைசன் திரைப்படத்திற்காக இரண்டு வருடமாக அவன் காத்திருக்கிறான். இதன் நடுவே எந்த திரைப்படத்தையும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.

 

ஒவ்வொரு காட்சியிலும் தனது தந்தை இதைவிட பெரியதாக செய்துவிட்டதாக கூறி இன்னும் பண்ணலாம் என்று புத்துணர்ச்சியுடன் பேசி வருகிறான் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். கபடி விளையாட்டை மையமாக எடுத்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சற்று முன்