நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இந்த படம், வரும் செப்டம்டர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
த கோட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக டைரக்டர் எச் வினோத் இயக்கத்தில், தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் தனது கடைசி படம் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஏனெனில் இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல், முழுநேர அரசியல்வாதியாக சட்டசபை தேர்தலை எதிர்கொளள தயாராக திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் வருகிற 22ம் தேதி விஜய் 50வது பிறந்த நாள் வருகிறது. வழக்கமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடும் விஜய், இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக தன் பிறந்த நாளை மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தடபுடலாக செய்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன், விஜய் திரிஷா நடிப்பில் 2004ம் ஆண்டில் வெளிவந்த கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டது. ரூ. 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. அந்த வகையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 21ம் தேதி விஜய் நடித்த பகவதி, போக்கிரி, துப்பாக்கி ஆகிய படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன.
அதுமட்டுமின்றி விஜய் நடித்த மாஸ்டர் படம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் யுகே நாடுகளில் வரும் 22ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏனெனில் இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது மாஸ்டர் படம், தமிழ்நாட்டில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது.
ஏனெனில் அது கொரொனா தொற்று காலமாக இருந்ததால், வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேசியா மற்றும் யுகே நாடுகளில் அப்போது ரிலீஸ் செய்யப்படவில்லை. ஏனெனில் கொரோனா தொற்று காரணமாக, தியேட்டர்கள் அனைத்துமே பல மாதங்களாக மூடியிருந்தன. எனவே, இந்த படத்தை ஓவர்சீஸ் உரிமை பெற்றிருந்த தயாரிப்பாளர் காஜா மொய்தீன், இப்போது மாஸ்டர் படத்தை 3 ஆண்டுகள், 5 மாதங்கள் கழித்து வெளிநாடுகளில் ரிலீஸ் செய்கிறார். மாஸ்டர் படத்தின் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.





