- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்… விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் கொடுத்தும் கண்டுக்க ஆளில்லையே -...

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்… விஜய் நடிப்பில் மாஸ் ஹிட் கொடுத்தும் கண்டுக்க ஆளில்லையே – அவரும் நோ சொல்லிட்டாரே? தவிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் சொந்த தம்பி கங்கை அமரன். இவரும் இசையமைப்பாளர், டைரக்டர், பாடகர் என பன்முக தன்மை கொண்டவர். கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. இவர் ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் நடிகராக வெங்கட் பிரபு பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை.

இதையடுத்து வெங்கட் பிரபு சென்னை 28 என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. வெங்கட் பிரபு இயக்குனராக ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதால் அடுத்து சரோஜா, கோவா, மாசு என்கிற மாசிலாமணி, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.

- Advertisement -

இதில் அஜீத் குமாரின் 50வது படம் மங்காத்தா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அதைத் தொடர்ந்து அஜீத்குமார் வெங்கட் பிரபுவுக்கு 2வது படம் இயக்க வாய்ப்பு தரவில்லை. அதேபோல் சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படமும் படுதோல்வி அடைந்தது. இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

மங்காத்தா படம் போலவே வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்தாண்டில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

துவக்கத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற தி கோட் படத்துக்கு பிறகு பெரிய அளவில் வரவேற்பு ரசிகர் மத்தியில் கிடைத்தது. அதற்கு காரணம் வில்லன் நடிப்பில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பு வேற லெவலில் இருந்தது. தி கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி அவர் ஓகே சொல்லியும் இருந்தார். ஆனால் வெங்கட் பிரபுவுக்கு இப்போது பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது.

அமரன் படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் படத்திலும், அடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த 3 படங்களை முடித்த பிறகுதான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் அடுத்த ஆண்டு இறுதி வரை தன்னிடம் கால்சீட் இல்லை. 3 படங்களை முடிக்கும் வரை காத்திருங்கள் என்று சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார். விஜய் நடித்த தி கோட் என்ற ஹிட் படத்தை கொடுத்தும் நமக்கு இப்படி ஒரு நிலமையா என்று வெங்கட் பிரபு அப்செட்டில் இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்