- Advertisement -
Homeபொழுதுபோக்குசரத்குமார் படம் ஷூட்டிங், இயக்குனரை கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்த மாஸ்டர் நடிகர்...

சரத்குமார் படம் ஷூட்டிங், இயக்குனரை கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்த மாஸ்டர் நடிகர் – நல்ல சான்ஸை இப்படி மிஸ் பண்ணிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் நாட்டாமை. கடந்த 1990களில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாக இருந்தது. இதில் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் யாராலும் அந்த ஒரு காட்சியை மறக்க முடியாது. நடிகர் பொன்னம்பலம், நடிகை வைஷ்ணவியை கெடுத்து விடுவார். கிராம பஞ்சாயத்து நடக்கும். அப்போது விஜயகுமார் ஊர் நாட்டாமையாக அமர்ந்து இந்த வழக்கை விசாரிப்பார்.

- Advertisement -

அப்போது அந்த பெண்ணை கெடுத்ததை பார்த்தது யார் என்று கேட்க சிலர் வந்து பார்த்ததாக சொல்வார்கள். அவர்கள் அந்த பெண்ணுக்கு மாமா அத்தை சித்தப்பா என்று உறவு முறை சொல்ல அவர்களை எல்லாம் செல்லாது செல்லாது என்று விஜயகுமார் அவர்களின் சாட்சியை மறுத்து விடுவார்.

அப்போது தாத்தா நான் பார்த்தேன் என்று சிறுவனாக மாஸ்டர் மகேந்திரன் வந்து பேசி அந்த காட்சியில் மிக அட்டகாசமாக நடித்திருப்பார். அவரது நடிப்பும் அந்த டயலாக் டெலிவரியும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த சிறுவன் தொடர்ந்து பல படங்களில் நடிக்கவில்லை.
ஆனால் இப்போது வாலிபராக வளர்ந்த நிலையில் சில படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய காமெடி நடிகர் பாவா லட்சுமணன் கூறியதாவது, நாட்டாமை படத்தில் நடித்த பிறகு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்த படம் சூரிய வம்சம். இந்த படத்தில் சரத்குமார் தேவயானி தம்பதியின் மகனாக நடிக்க மாஸ்டர் மகேந்திரனை தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

ஆனால் அந்த பையன் இயக்குனர் விக்ரமனிடம் எத்தனை ஷாட் இன்னிக்கு எடுப்பீங்க, எனக்கு என்ன டயலாக்? கேமரா ஆங்கிள் எல்லாம் எப்படி வைக்கறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். அவரது நடவடிக்கையை பார்த்து அப்செட் ஆன விக்ரமன் அந்த பையன் வேண்டாம். வீட்டுக்கு அனுப்பிடுங்க என்று சொல்லிவிட்டு ஹேமதா என்ற சிறுமிக்கு பையன் வேடமிட்டு நடிக்க செய்தார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்