- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த நடிகை...

நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த நடிகை மீனா – காரணத்தை அவங்களே சொல்லிட்டாங்களே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருடன் நடிகை மீனா ஆனந்தப் பூங்காற்றே வில்லன் மற்றும் சிட்டிசன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. ஆனால் நடிகர் விஜயுடன் நடிகை மீனா ஒரு படத்தில் கூட நாயகியாக நடிக்கவில்லை. ஷாஜகான் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன் என்ற ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டுமே விஜயுடன் மீனா ஜோடியாக ஆடியிருக்கிறார்.

இதுகுறித்து ஒருமுறை பேசிய நடிகை மீனா, எனக்கு நடிகர்கள் விஜய் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோருடன் ஒரு படத்திலாவது சேர்ந்த நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அது நிறைவேறவே இல்லை. ஆனால் என் மகள் நைனிகா விஜயுடன் தெறி படத்திலும் அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்து விட்டாள். எனக்குதான் அந்த வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் சினிமாவை பொருத்த வரை ஒரு படம் பெரிய வெற்றியை பெற்ற பிறகு பார்த்தால் அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ, ஹீரோயின் காமெடியன் இசையமைப்பாளர் என பலரும் மாறி இருப்பார்கள். அந்த படத்தை துவங்கிய போது இயக்குனர் தயாரிப்பாளர் விரும்பிய கலைஞர்கள் வேறு படங்களில் கமிட் ஆகி அதில் பிஸியாக இருந்திருப்பார்கள். அதனால் அவர்களை கேட்டுவிட்டு பிறகு அவர்கள் தயாராக இல்லை என்ற நிலையில் மற்ற நடிகர் நடிகை இசையமைப்பாளர் என வாய்ப்பு மாறி போயிருக்கும்.

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மீனா கூறியதாவது, நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் விஜய் அஜீத்குமாருடன் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் என்னால பண்ண முடியலே. எல்லாமே கால்ஷீட் இல்லே, தேதி பிரச்னைதான் காரணம். ஏன்னா பல மொழிகளில் நான் அப்போ நடிச்சிட்டு இருந்தேன்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருடன் நான் வாலி படம் பண்ண வேண்டியது. அதுவும் மிஸ் ஆயிடுச்சு. நிறைய படங்கள் இப்படி மிஸ் ஆகியிருக்கு. எல்லாருமே நான் பண்ணனும், இந்த படம் நான் நடிக்கணும் என்று சொல்லும் போதுஒரு பக்கம் நமக்கு சந்தோஷமாக இருந்தாலும் எல்லா படங்களுமே நான் பண்ண முடியாது.

அதனால் பல மொழிகளில் நடித்த என்னால் சில முக்கிய படங்களில் கூட நடிக்க முடியவில்லை. நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்திலும் நான் நடிக்க முடியலே. அந்த படத்தோட ஒரிஜினல் மலையாளத்துல நான்தான் நடிச்சிருந்தேன். தமிழ் வெர்சன்ல விஜய் கூட நடிக்க கேட்டும் என்னால் முடியலை. டேட் பிரச்னைதான் காரணம் என்று நடிகை மீனா வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்