- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய வீட்டை 100 கோடி ரூபாய்க்கு விற்ற நடிகை மீனா...

10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய வீட்டை 100 கோடி ரூபாய்க்கு விற்ற நடிகை மீனா – அத்தனையும் பொய்யா கோபால் என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!

- Advertisement -

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி மீனா. பிறகு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடிகை மீனா நாயகியாக அறிமுகமானார். பிறகு எஜமான் படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த மீனா 1990களில் ஒரு நட்சத்திர நாயகியாக தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரை இழந்த நடிகை மீனா, தனது மகள் நைனிகாவுடன் சிங்கிள் பேரண்ட் ஆக இருந்து வருகிறார். இப்போதும் நடிகை மீனா தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அவர் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது வீட்டை 100 கோடி ரூபாய்க்கு விற்றார் என்ற தகவல் இணையத்தில் வைரலானது. சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு பின்னால் இருக்கும் ஸ்ரீராம் காலனியில் உள்ள வீட்டில்தான் பல ஆண்டுகளாக மீனா வசித்து வருகிறார். சென்னை சாலிகிராமத்தில் ஆரம்பத்தில் வசித்து வந்த மீனா பின்னர் இந்த வீட்டுக்கு மாறினார்.

அவரது சைதாப்பேட்டை வீடு கேரளா ஸ்டைலில் மரவேலைப்பாடுகளுடன் அழகாக கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த வீட்டை மீனா விற்று விட்டார் என்றும் 10 கோடி ரூபாய்க்கு வங்கியில் கடன் வாங்கி அந்த வீட்டை கட்டினார் என்றும் இப்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி அந்த வீட்டின் கலை அழகில் மயங்கி 100 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளனர் என்றும் அந்த வீட்டை விற்று பல கோடி ரூபாய் மீனா லாபம் சம்பாதித்து விட்டார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது.

- Advertisement -

மீனாவின் இந்த வருவாய் திறமையை பலரும் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர். இது உண்மையான தகவலா, தனது வீட்டை மீனா விற்றுவிட்டு இப்போது எங்கு வசிக்கிறார் என்ற கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் மீனாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இதுகுறித்து விசாரிக்கும் போது பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இது முற்றிலும் தவறான தகவல் என்றும் யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்டிமென்டாக அந்த வீடு மீனாவுக்கு மிகவும் நெருக்கமானது. அதை எப்படி விற்பார்? தவிர அந்த வீட்டின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கு எல்லாம் போகாது. அது அவ்வளவு பெரிய வீடும் இல்லை. யாரோ தவறான வதந்தியை பரப்புகிறார்கள். தனக்கு சொந்தமான ஒரு பெரிய நிலத்தை தான் மீனா சமீபத்தில் விற்றார். அதை தான் இப்படி மாற்றி பேசுகிறார்கள். இப்போதும் அந்த வீட்டில் தான் மீனா தன் மகளுடன் வகித்து வருகிறார். இப்போது மீனா வெளிநாடு சென்று இருக்கிறார். இணையத்தில் பரவும் தகவல்களை நம்பி பலரும் அதை மேலும் மேலும் பரப்பி வைரலாக்கி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்