- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனவரி 9ம் தேதி மட்டுமே 5 காட்சிகள் திரையிட வாய்ப்பு… மற்ற நாட்களில் விஜய்க்கு வில்லனாக...

ஜனவரி 9ம் தேதி மட்டுமே 5 காட்சிகள் திரையிட வாய்ப்பு… மற்ற நாட்களில் விஜய்க்கு வில்லனாக மாறும் பராசக்தி – அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் நீடித்து இருக்க வேண்டும் என்ற ஆசையில் அவரது ரசிகர்கள் இருந்த நிலையில், விஜய் திடீரென அரசியலில் குதித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்க தலைவராக உள்ள அவர், ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டார்.

வருகிற ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. இதுவே அவரது கடைசி படம் என்று கூறப்படும் நிலையில் மிகப்பெரிய வெற்றியை, வசூல் சாதனையை இந்த படம் படைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் டிவிகே கட்சியினரும் ஆசைப்படுகின்றனர். ஆனால் அதற்கு பல சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன.

- Advertisement -

ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதியும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் இடைவௌியில் ஜனவரி 14ம் தேதி பராசக்தி படமும் வெளியாவதாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கடந்த 18ம் தேதி ஈரோட்டில் நடந்த தவெக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், திமுக ஒரு தீயசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று விமர்சனம் செய்தார். இதையடுத்து திமுகவினர் தரப்பில் கடும் கோபம் ஏற்பட்டது.

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் வருகிற ஜனவரி 14ம் தேதி வெளியாக இருந்த பராசக்தி படத்தை அதற்கு முன்பாக 10ம் தேதியில் ரிலீஸ் செய்யுமாறு உத்தரவாகவே கூறிவிட்டார். அதனால் 9ம் தேதி ஜனநாயகன் படமும் மறுநாள் 10ம் தேதி பராசக்தி படமும் ரிலீஸாக உள்ளது. இது வசூலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

- Advertisement -

மேலும் ஜனவரி 9ம் தேதி ஒரு நாள் மட்டும் ஜனநாயகன் படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதித்த நிலையில் 10ம் தேதி பராசக்தி படத்தை 5 காட்சிகள் திரையிட வேண்டும். மேலும் 10ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்துக்கு தினமும் 2 காட்சிகள் பெரிய திரைகளை ஒதுக்கவும் வினியோகஸ்தர்கள் மூலம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது.

இதனால் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படும். எதிர்பார்த்த வசூல் இருக்காது என இப்போதே தியேட்டர் உரிமையாளர்கள் புலம்புகின்றனர். மேலும் பராசக்தி படம் ஜனநாயகன் படம் என மாறி மாறி திரையிட்டால் தளபதி படத்துக்கு வருபவர்கள், சிவகார்த்திகேயன் படத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் வசூல் கணிசமாக குறையும் என்பதால் விஜய் ரசிகர்களும் தவெக கட்சியினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்