- Advertisement -
Homeபொழுதுபோக்கு2025ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் அஜீத்குமாரின் 2 படங்கள், இனி 2026ம் ஆண்டில்தான் புதிய படம்...

2025ம் ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகும் அஜீத்குமாரின் 2 படங்கள், இனி 2026ம் ஆண்டில்தான் புதிய படம் – 10 மாதங்களுக்கு ஏகே ரொம்பவும் பிஸி!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடைசியாக நடித்து வெளிவந்த படம் துணிவு. இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அதற்கு பின் அவரது படம் இதுவரை வெளியாகவில்லை. 2 ஆண்டுகள் ஆன நிலையில், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு மே 1ம் தேதி குட்பேட் அக்லி படம் ரிலீஸாகிறது.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில், இப்போது அஜீத்குமார், திரிஷா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் அஜீத்குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அஜீத்குமார் இப்போது உடல் எடை குறைத்து, கட்டிங் சேவிங் செய்து தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசி, ரொம்பவும் ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி பாடல் காட்சிக்கான அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இப்படியே இருங்க ஏகே, உங்க அழகை இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடிகர் அஜீத்குமார் வருகிற ஜனவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸில் பங்கேற்க உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் போல, கார் பந்தய போட்டியிலும் அணிகள் இருக்கின்றன. இதில் அஜீத்குமார் கார் ரேஸ் பந்தய அணிக்கு கேப்டனாகவும் உள்ளார். ஒரு அணியை இவரது பொறுப்பில் எடுத்திருக்கிறார்.

அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற இந்த அணி தொடர்ந்து 10 மாதங்களுக்கு நடக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க உள்ளது. தொடர்ந்து 10 நாடுகளில் இந்த கார் ரேஸ் போட்டிகள் நடக்கவும் உள்ளது. அதனால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில்தான் அஜீத்குமார் இருக்கப் போகிறார். அதனால் படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை.

அதனால் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படம் 2026ம் ஆண்டில்தான் ஷூட்டிங் நடத்தப்பட்டு, படம் வெளியாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வருகிற பொங்கலுக்கு விடாமுயற்சி படமும், அதன்பிறகு மே 1ம் தேதி குட் பேட் அக்லி படமும் வெளிவர உள்ளதால், இந்த ஓராண்டு கால இடைவெளி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்யாது என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்