தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக பெயர் வாங்கியவர் வனிதா விஜயகுமார். சமீபத்தில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா சொந்தமாக தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் கதையை எழுதிய வனிதா விஜயகுமார் டைரக்ட்டும் அவரே செய்திருக்கிறார்.
இன்று மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் சிறப்பு காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற படத்தின் நாயகி மற்றும் டைரக்டர் வனிதா விஜயகுமார் கூறியதாவது, எனக்கு கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது. எத்தனை தியேட்டர் வேறு என்னென்ன பிரச்சனைகள் என்று தெரியவில்லை. அனைத்து படங்களுக்கும் இந்த நிலைதான் இருக்கிறது.
மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அடல்ட் கன்டென்ட் அதிகமாக இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். கதை அப்படிப்பட்டது. இன்றைய தலைமுறைக்கு இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தின் ஹீரோ ராபர்ட் மாஸ்டர் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வர முடியவில்லை.
ராத்திரி சிவராத்திரி பாடலை ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம். படத்தில் அப்பா படம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி வருகிறது. அவர் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார். நானே அவரின் காப்பிரைட் தானே? என் மகள் ஜோவிகா தெலுங்கில் நடிக்கப் போகிறார். அடுத்து தமிழில் நடிப்பார்.
என் மகளை நிறைய பேர் ட்ரோல் செய்கிறார்கள். விஜய் சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். நாளைய தீர்ப்பு படம் வெளியான போது நடிகர் விஜய்க்கும் இப்படித்தான் நடந்தது. அதையும் மீறி விஜய் ஜெயித்தார்.
விஜய் சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகள் ஜோவிகாவும் ஜெயிப்பாள். ஆரம்பத்தில் நயன்தாராவுக்கும் திரிஷாவுக்கும் கூட இப்படித்தான் நடந்தது என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். நடிகர் விஜயுடன் விஜய் சேதுபதி மகன் சூர்யாவையும் நயன்தாரா திரிஷாவுடன் தனது மகள் ஜோவிகாவை வனிதா விஜயகுமார் ஒப்பிட்டு பேசியிருப்பதை, என்ன காமெடி செய்கிறாரா என்று ரசிகர்கள் பலர் கலாய்த்துள்ளனர்.





