- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங்கை முடித்துவிட்டு கிளம்பிய எம்ஜிஆர்… தொழிலாளர்கள் வைத்த கோரிக்கை - உடனே பொன்மனச் செம்மல் என்ன...

ஷூட்டிங்கை முடித்துவிட்டு கிளம்பிய எம்ஜிஆர்… தொழிலாளர்கள் வைத்த கோரிக்கை – உடனே பொன்மனச் செம்மல் என்ன செய்தார் தெரியுமா?

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆரை பொருத்த வரை வள்ளல் குணத்தில் அவருக்கு மிஞ்சியவராக யாரையும் இதுவரை சொல்ல முடியாது. சினிமா நடிகராக இருந்த போதும், அரசியல் தலைவராக மாறிய போதும் தமிழக முதல்வராக பதவி வகித்த போதும் அவரது வாழ்க்கையில் ஒரே நோக்கமாக இருந்தது மக்களுக்கு நன்மை செய்வதும், மற்றவர்களுக்கு உதவுவதும்தான்.

கேட்டால் மட்டுமல்ல, கேட்காமலேயே மற்றவர்களுக்கு தேடிப்போய் உதவி செய்யும் தாராள குணம் கொண்டவர் எம்ஜிஆர். சக நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் என சினிமாவில் இருந்த போது அவர்களுக்கு தாராளமான உதவிகளை செய்தவர் எம்ஜிஆர். அதுபோல் தொழிலாளர்களுக்கு அவர் உதவிய ஒரு சம்பவம் குறித்த தகவலும் இப்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பட்டிமன்ற நடுவர் மற்றும் நடிகர் கு ஞானசம்பந்தன் கூறியதாவது, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடந்தது. கடைசி நாளில் ஒரு பாடல் காட்சியுடன் அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பாடல் காட்சியில் நடித்து முடித்து விட்டு எம்ஜிஆர் கிளம்ப தயாரானார். அப்போது அவரை படக்குழு சார்ந்த தொழிலாளர்கள் சந்தித்து பேசினர்.

அண்ணே இன்றுடன் ஷூட்டிங் முடிந்து விட்டது. நாளை முதல் எங்களுக்கு வேலை இல்லை. வருமானமும் இல்லை என்று கவலையாக கூறினர். உடனே எம்ஜிஆர் படத்தின் இயக்குனரை அழைத்தார். இந்த பாடல் காட்சி எனக்கு சரியாக வந்த மாதிரி தெரியவில்லை. திருப்தியாக இல்லை. மீண்டும் இந்த பாடல் காட்சியை சிறப்பாக எடுக்கலாமா?

- Advertisement -

இந்த ஷெட்டை மாற்றிவிட்டு வேறு மாதிரியான ஒரு செட்டப்பில் இந்த பாடல் காட்சியை எடுக்க வேண்டும் என்று இயக்குனரிடம் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். அதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்றும் கேட்டிருக்கிறார். எம்ஜிஆரே மீண்டும் பாடலை எடுக்க சொன்னதால், இயக்குனருக்கு ஒரே சந்தோஷம். 25 நாட்கள் தேவைப்படும் என்று கூறியிருக்கிறார். அதுக்கு ரெடி பண்ணுங்க, நாளைக்கே ஷூட்டிங் என்றும் இயக்குனரிடம் கூறியிருக்கிறார்.

அதன்பிறகு எம்ஜிஆர், தொழிலாளர்கள் பக்கமாக திரும்பி சிரித்தபடி சரியா? என்று கேட்டிருக்கிறார். அங்கே இருந்தவர்கள் அவரை கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறியிருக்கிறார்கள். தங்களுக்கு நாளை முதல் வேலை இல்லை என்று தொழிலாளர்கள் சொன்னவுடன் இன்னும் 25 நாட்களுக்கு அவர்களுக்கு வருமானம் கிடைக்க உடனே ஏற்பாடு செய்தவர் எம்ஜிஆர். அதனால்தான் அவரை பொன்மனச் செம்மல் என அழைக்கிறார்கள் என்று நடுவர் கு ஞானசம்பந்தன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்