- Advertisement -
திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தவறு செய்தால் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் என்கின்றனர். அவர் கண்டித்தது உண்மை என்றால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவை துணைத் தலைவர் பதவியில் மாண்பை குறைத்தவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்த கடும் நடவடிக்கையா? பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை என்று முக ஸ்டாலின் கிண்டலாக கூறியிருக்கிறார்.





