நடிகர் அஜீத்குமார் இப்போது திரைப்பட தயாரிப்பாளராக களத்தில் இறங்கி உள்ளார். அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தை அவரது மனைவி ஷாலினி அஜீத்குமார்தான் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு டேர் டெவில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.
இந்த படத்துக்கான ஷூட்டிங் செப்டம்பர் மாத இறுதியில் துவங்க உள்ளது. அனிருத் இசையமைக்கிறார். முதன் முறையாக ஷாலினி இந்த படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். அஜீத்குமார் சம்பளமாக ரூ. 185 கோடி கேட்ட நிலையில் யாருமே தர முன்வராத நிலையில் அவரே சொந்தமாக இந்த படத்தை ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டேர் டெவில் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் மலையாள நடிகர் மோகன்லால் கமிட் செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. அவரது சம்பளம் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி என்று சொல்லப்பட்டது. இதில் அவர் அஜீத்குமாருக்கு அப்பாவாக நடிக்கிறார் என்றும் முதலில் ஒரு தகவல் கசிந்தது.
ஆனால் இப்போது அஜீத்குமாருக்கு நண்பராக தான் மோகன்லால் நடிக்க உள்ளதாகவும் உறுதியானது. இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட்படி இந்த படத்தில் இருந்து மோகன்லால் நீக்கப்பட்டுள்ளார். அவர் உறுதியாக இந்த படத்தில் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் அஜீத்குமார் அவர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.
அதற்கு முக்கிய காரணம், படத்தின் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக தான். அதனால் மோகன்லால் சம்பளம் ரூ. 30 கோடி வரை குறைந்தால் படத்தின் பட்ஜெட்டில் ரூ. 30 கோடி தடாலடியாக குறையும். அதே நேரத்தில் மோகன்லால் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸ்சும் நீடிக்கிறது.
ஏற்கனவே இந்த கேரக்டரில் முதலில் யோசிக்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ் தான். ஆனால் சட்டசபை தேர்தல் நேரத்தில் தவெக தலைவர் விஜயை சத்யராஜ் கண்டபடி விமர்சித்து பேசியிருந்தார். இதனால் கடுப்பான அஜீத்குமார், என்னுடைய படத்தில் சத்யராஜ் இருக்க கூடாது என்று உறுதியாக டைரக்டரிடம் சொல்லி விட்டார். அதனால் அந்த வாய்ப்பும் சத்யராஜூக்கு பறி போய்விட்டது. இப்போது அஜீத்குமார் நண்பராக நடிக்க நடிகரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.





