அரசியலில் வாரிசுகள் உருவாவதைப் போல சினிமாவிலும் வாரிசுகள் நடிக்க வருவது பல ஆண்டுகளாக வழக்கமாகவே இருந்து வருகிறது. அப்படி பல வாரிசு நடிகர்கள் இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தியிலும் வாரிசுகளின் வருகை மிக அதிகமாக உள்ளது.
அந்த வகையில் பெரும்பாலான நடிகர்கள் நடிகைகளின் மகள்கள் மகன்கள் சினிமாவில் நடிக்க ஆர்வமாக வருகின்றனர். அதேபோல் சிலர் இயக்குனர்களும் ஆகின்றனர். இயக்குனர்களின் மகன்கள் மகள்கள் நடிகர் நடிகை ஆகின்றனர். சினிமாவில் மிக குறுகிய காலத்தில் பேரும் புகழும் கிடைப்பது மட்டுமின்றி நிரந்தரமான ஒரு வாழ்க்கையும் அவர்களுக்கு அதில் கிடைப்பதால் பெரும்பாலான கலைஞர்களின் பிள்ளைகள் சினிமா துறைக்கு வருவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சிலருக்கு நடிக்க ஆர்வமில்லாத பட்சத்தில் சினிமாவில் இசைத்துறை இயக்கம் ஒளிப்பதிவு போன்றவற்றில் ஆர்வமாக இறங்கி விடுகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவின் நட்சத்திர நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஏற்கனவே நடிகராக உள்ளார். அவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். துடக்கம் என்ற மலையாள திரைப்படம் மூலம் கதாநாயகியாக விஸ்மயா அறிமுகமாகிறார். நடிகர் மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமா இந்த படத்தை தயாரித்துள்ளது.
மலையாளத்தில் வெளியான 2018 படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தான் துடக்கம் படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு போஸ்டரில் நடிகர் மோகன்லாலின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
தனது மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ள துடக்கம் படத்தில் மோகன்லாலும் இணைந்து நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது அவர்களின் அப்பா நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார். அதபோலவே நடிகர் மோகன்லால் தன் மகள் விஸ்மயா நடித்த துடக்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.





