- Advertisement -
Homeபொழுதுபோக்குசூரியவம்சம் படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த பிரபல நடிகை… அதற்கு பின்தான் அவர் நடித்தாரா?...

சூரியவம்சம் படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த பிரபல நடிகை… அதற்கு பின்தான் அவர் நடித்தாரா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஹிட் படங்கள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த சூரியவம்சம் படத்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. கடந்த 1997ம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் சூரிய வம்சம்.

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் அப்பா, மகன் என்ற இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தேவயானி நாயகியாக நடித்திருந்தார். மேலும் ராதிகா மணிவண்ணன் பிரியாராமன் ஆர் சுந்தர்ராஜன் ஆனந்தராஜ் ஜெய்கணேஷ் அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

சூரியவம்சம் படத்துக்கு எஸ்ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்தன.
சலக்கு சலக்கு சரிகை சேலை பாடல் இன்றவும் இணையத்தில் டிரண்டிங் பாடலாக இருந்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மணிவண்ணன் காமெடி காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தில் பிரியாராமன், சரத்குமாரின் முறைப்பெண்ணாக இருப்பார். சிறுவயதில் இருந்தே சரத்குமார் அவரை காதலிப்பார். ஆனால் வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும் சூழலில், படிக்காத உன்னை படித்த நான் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று பிரியாராமன், சரத்குமாரை அவமானமாக பேசி மறுத்து விடுவார். பிறகுதான் தேவயானியை சரத்குமார் திருமணம் செய்வது போல படத்தின் கதை இருக்கும்.

- Advertisement -

இந்நிலையில் சூரியவம்சம் படத்தில் பிரியாராமன் நடித்த கேரக்டரில் முதலில் நடிகை மோகினியை தான் இயக்குனர் விக்ரமன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்து விட்டார். நான் ஏன் ஹீரோவுக்கு துரோகம் பண்ற ரோலில் நடிக்க வேண்டும். எனக்கு கதாநாயகி தேவயானி ரோல் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் விக்ரமன், ஏற்கனவே அந்த கேரக்டரில் தேவையானியை புக் செய்து விட்டோம். பிரியாராமன் கேரக்டரில் நீங்கள் பண்ணுங்க. நல்ல பெயர் உங்களுக்கு கிடைக்கும் என்று விக்ரமன் கூறியிருக்கிறார். நான் நெகட்டிவ் ரோல் பண்ண மாட்டேன். அப்புறம் எனக்கு வில்லி ரோல்தான் கிடைக்கும் என்று சூரியவம்சம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மோகினி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்