- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் இப்படி சம்பவம் செய்றாங்களா? அழைப்பிதழ் விலையே கண்ணைக்...

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழாவில் இப்படி சம்பவம் செய்றாங்களா? அழைப்பிதழ் விலையே கண்ணைக் கட்டுது – இதுல 20 பேருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடைசியாக தியேட்டரில் அவர் நடித்த 75வது படம் அன்னபூரணி வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மண்ணாங்கட்டி ராக்காயி டாக்ஸிக் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார்.

கடந்த 2021ம் ஆண்டில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் மூக்குத்தி அம்மன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி ஜர்னலிஸ்ட் கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

போலி சாமியாரை மையப்படுத்திய எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. இதன் தொடர்ச்சியாக மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. மூக்குத்தி அம்மனாக மீண்டும் நயன்தாரா நடிக்க இந்த படத்தை முன்னணி இயக்குனரான சுந்தர் சி இயக்குகிறார்.

இந்த படத்தில் சுந்தர் சி சம்பளம் ரூ. 20 கோடி என்றும், நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி என்றும் மீதி 70 கோடி ரூபாயில் இந்த படம் மிக பிரமாண்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் துவக்க விழா பூஜை மற்றும் படத்தின் துவக்க விழா வருகிற 6ம் தேதி சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் துவங்குகிறது.

- Advertisement -

இதற்காக 15 அடி அம்மன் சிலை அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவாளர்கள் ஆன்மீக பாடகர்கள் சாமியார்கள் மடாதிபதிகள் குறிப்பாக பெண் ஆன்மீகவாதிகளும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பிரமோ ஷூட்டிங் நடக்கிறது. அதில் நயன்தாரா பங்கேற்க உள்ளார். தொடர்ந்து மார்ச் 15 முதல் ஒரு மாத படப்பிடிப்பிலும் நயன்தாரா கலந்துக்கொள்கிறார்.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை விழா அழைப்பிதழ் மிக பிரமாண்டமாக தயாரித்து, முக்கிய விஐபிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு அழைப்பிதழின் அடக்கவிலை ரூ. 6 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும், படத்தின் துவக்க விழா பூஜையில் பங்கேற்கும் பிரபல விஐபி பெண்கள் 20 பேருக்கு வைர மூக்குத்திகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்