- Advertisement -
Homeபொழுதுபோக்குபொள்ளாச்சியில் திட்டமிடப்பட்ட மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு, திடீரென ரத்தாக நடிகர் வடிவேலு தான் காரணமா?...

பொள்ளாச்சியில் திட்டமிடப்பட்ட மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு, திடீரென ரத்தாக நடிகர் வடிவேலு தான் காரணமா? – வெளியான முக்கிய தகவல்கள்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தற்போது சென்னை ஆலம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் நஸ்ராத் பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை நயன்தாரா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இனியா அபிநயா யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படப்பிடிப்பில் பங்கேற்று வருகின்றனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படம் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரமோ ஷூட்டிங்குடன் துவங்கிய நிலையில் பொள்ளாச்சியில் தான் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி வெளிப்புற படப்பிடிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இதற்கு காரணம் நடிகை நயன்தாரா தான் என்று முதலில் சொல்லப்பட்டது. அவர் என் குழந்தைகளை விட்டுவிட்டு பொள்ளாச்சி போன்ற வெளியூர்களில் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று திட்டவட்டமாக சொன்னதால் சென்னையிலேயே சுந்தர் சி ஷூட்டிங்கை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.

மூக்குத்தி அம்மன் என்ற படத்தை முதலில் இயக்கியவர் நடிகர் ஆர்ஜே பாலாஜிதான். இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்த நிலையில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்திருந்தார். அவரது அம்மா கேரக்டரில் நடிகை ஊர்வசி நடித்திருந்தார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

- Advertisement -

ஆனால் இப்போது கடுமையான மூட்டுவலி காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதால் சென்னையில் இருந்து பொள்ளாச்சி வரை பயணம் செய்ய முடியாத சூழலில், அவரால் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற நிலையில், பொள்ளாச்சி ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல் கன்னட நடிகர் துனியா விஜய் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் இப்போது இந்த ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது.

அதனால் பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடத்தினால் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்க முடியாது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு பல ஆண்டுகளுக்கு பின் கேங்கர்ஸ் என்ற படத்தில் 5 கெட்டப்புகளில் நடித்துள்ளார். அந்த படம் வருகிற ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸாகும் நிலையில் படத்தின் பிரமோசன் பணிகளை இயக்குனர் சுந்தர் சி சென்னையி்ல இருந்தால்தான் சரியாக செய்ய முடியும். இந்த காரணங்களால்தான் பொள்ளாச்சி ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு, சென்னையில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு இப்போது நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்